இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா! இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்.. இழந்தது எவை என இறைவன் கேட்டான்.. பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்.. பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்? கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்.. கோலம் மாறி அழகையும் இழந்தேன்.. வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்.. எதை என்று சொல்வேன் நான்.. இறைவன் கேட்கையில்? எதையெல்லாம் இழந்தேனோ அதையெல்லாம் மீண்டும் தா என்றேன். அழகாகச் சிரித்தான் இறைவன். ”கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்".. "உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்".. "உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்".. "நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்".. சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல.. தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்.. திகைத்தேன்! இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்.. வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்.. இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்.. இறைவன் மறைந்தான்..
Saturday, 16 July 2016
தாய்மையே சிறந்த சக்தி
ஒரு மலைப் பிரதேசத்தில் மலை உச்சியில் ஒர் இனத்தாரும், அடிவாரத்தில் இன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள். இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை. ஒரு முறை உயரத்தில் இருந்தவர்கள் அடிவாரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்தி விட்டார்கள். சமூகத்திலிருந்த சில பெரியவர்கள், மலைமேல் இருந்த சமூகத்தினரிடம் சமாதானமாகப் போய் பேசினால் குழந்தையை மீட்டு வந்து விட சாத்தியம் இருப்பதாக ஊரில் உள்ள இளைஞர்களிடம் அறிவுரை கூறினர். இளைஞர்கள் சிலர் உடனே முன்வந்தார்கள். அவர்கள் கடினமான வேலைகள் செய்து பழகியவர்கள். எந்தச் செயலை எடுத்தாலும் அதை விடாமுயற்சியுடன் முடிக்கும் மனப்போக்கைக் கொண்டவர்கள். ஊர் பெரியவர்களும், இந்தச் செயலை முடிக்க இவர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள். இளைஞர்களும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள். அந்த மலையின் சில பகுதிகள் மிகவும் செங்குத்தானவை. அந்த இளைஞர்களால் அப்படி ஒரு பகுதியை ஏறிக் கடக்க முடியவில்லை. விடாமுயற்சியுடன் அப்பகுதியைக் கடக்க பலமணி நேரமாக பல வழிகளில் முயன்று கொண்டிருந்தனர். களைத்துப் போனால் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் முயற்சித்தனர். அப்போது தம் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவதைப் பார்த்தார்கள். அவள் அருகில் வந்தவுடன் நாங்கள் ஏற சிரமப்பட்ட மலையை நீ ஏறிச் சென்றுவிட்டாயே! எப்படி? என்று வியப்புடன் கேட்டார்கள். அவள் இடுப்பிலிருந்த குழந்தையைக் காட்டி இது உங்கள் குழந்தை இல்லை. என் குழந்தை. அதுதான் வித்தியாசம் என்று பதில் சொன்னாள்.
பிரம்மா படத்தில் "ஜோ" ஜோடி யார்???
தமிழில் முன்னணி கதநயகி. இன்றும் இளைஞர்களின் கனவுக்கன்னி ஜோ.
திருமனம் ஆகிய பின் 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைத்து விட்டார் ஜோதிகா. இப்போது பிரம்மா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார ஜோதிகா்.இந்த படத்தில் லிவிங்ஸ்டன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றாராம்.பலரும் ஜோதிகாவிற்கு ஜோடி தான் லிவிங்ஸ்டன் என கூற, ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா?
என்பதற்காக இந்த இரகசியம் காக்கப்படுவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.காரணம் ஜோதிகா தமிழில் ஒரு ரவுன்டு வந்து உள்ளர், இதற்கு முன்.
இன்றைய சிந்தனைகள்
1.வாழ்க்கை மிக சுவையானது.. உங்கள் அறியாமையினால் அதைக் கசப்பாக்கி விடாதீர்கள்..
2. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தலாகவும், கிழிசலாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.
3. முடிவு தெரியாத நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டே இருக்கும்
4. யாருக்கேனும் குழி தோண்டவும், எவர் மீதாவது மன்னைப் போடவும் விரும்பினால், அதை "விதைகளுக்கு" செய்யவும்..
கும்பகோணம் பள்ளிக்கூடத் தீ விபத்து இன்று
கும்பகோணம் பள்ளிக்கூடத் தீ விபத்து இன்று 2004, சூலை 16 ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தைப் பற்றியது. இவ்விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். இறந்த குழந்தைகள் அனைவரும் 7 வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்டவர்களாவர். 18 நபர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது. இத்தீவிபத்து மதிய உணவு தயாரிக்கும்போது ஏற்பட்டது. இவ்விபத்திற்கு பின் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளும் கட்டமைப்பு விதிகளும் கொண்டுவரப்பட்டன.
இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா . 1 லட்சம் கருணைத் தொகையாகவும் கடுமையாகக் காயமுற்றோருக்கு தலா 25 ஆயிரமும் லேசாகக் காயமுற்றவர்களுக்கு தலா
. 10 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்பட்டன. இவ் விபத்து குறித்து விசாரித்த நீதிபதி சம்பத் கமிஷன் , இவ் விபத்துக்கு முற்றிலும் அரசு அதிகாரிகள்தான் பொறுப்பு என்று தெரிவித்தது. அந்த அறிக்கையை, அப்படியே அரசு ஏற்றுக்கொண்ட அரசு , பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றர்.
இந்த வழக்கில் 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பிரபாகரன் என்பவர் அப்ரூவராக மாறினார்.இந்த வழக்கில் 488 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு 3,126 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 60 ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. ஆரம்ப கட்ட விசாரணை கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், பின்னர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு 2006 ஜூலை 12ல் மாற்றப்பட்டது. இங்கு சாட்சிகள் விசாரணை 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 22 மாதங்கள் நடைபெற்று வந்தன. விசாரணை 2014 , ஜூலை 17 ஆம் தேதியுடன் முடிவடைந்தது
நட்பு
1. சண்னடயிட்டு நம்மை விட்டு விலகிய பின்னும் நாம் சொன்ன ரகசியம் காக்கப்படுமாயின், நீ இழந்தது சிறந்த நண்பனை
2. நட்பு.. ஒரு தோழனிடம் உணரும் தாயின் அன்பு.. ஒரு தோழிக்கு விலை மதிக்கக் முடியாது பொக்கிஷம்
3. சொல்லும் போது, அதை அவன் நம்பிவிடும் முட்டாள் என்று மட்டும் நினைக்காதே.. உன்னை காயப்படுத்த கூடாது என்பதற்காக தனது உணர்சிகளை மறைத்துக் கொள்கிறான்..!!
4. என்னை விட நல்ல நண்பனை நீ கண்டுபிடித்தால் என்னைக் கடந்து செல்.. நான் உன்னை தடுக்கமாட்டேன்.. ஆனால், அவன் உன்னை விட்டு விலகிச் சென்றால் பின்னால் திரும்பி பார்.. அங்கே உனக்காக நான் இருப்பேன்.. அப்போதும் நல்ல நண்பனாய்..!
5. பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை.. ஆனால் இறக்கும் போது, கண்டிப்பாக கொண்டு செல்வேன்.. உங்கள் நினைவுகளை...!!
Friday, 15 July 2016
தண்ணீர்
பரமசிவம் தன் நண்பனை பார்க்க அவன் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தான். அப்போது தெருக் குழாயில் ஒரு இடத்தில் தண்ணீர் வீணாக கீழே கொட்டிக் கொண்டிருந்தது.
பரமா ஓடிச் சென்று குழாயை மூடினான். அப்போது அத்தண்ணீர் குடத்தை எடுக்க வந்தப் பெண்ணை நோக்கினான்.
''அம்மா! ஏனம்மா! தண்ணீரை வீணாக்குகிறீர்கள்! குடம் நிரம்பும் வரை நின்று குழாயை மூடி எடுத்துச் செல்லலாமே,'' என்றான்.
அதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த அப்பெண், அத்தெருவைச் சேர்ந்த நான்கைந்து பெண்களையும் சேர்த்தபடி
அவனிடம் சண்டை போட்டாள்.
''ஏனப்பா! இந்தத் தெருவுக்கே புதியவனாக இருக்கிறாய்! நீ இப்போது எங்களுக்கு அறிவுரைச் சொல்லிட வந்து விட்டாயா? மரியாதையாக இங்கிருந்து ஓடிவிடு!'' என்றாள் அந்தப் பெண்.
''அம்மா மன்னித்து விடுங்கள்! இந்த ஊரில் என் நண்பனைப் பார்க்க வந்தேன். வந்த இடத்தில் தான் இக்காட்சியைக் கண்டேன். தண்ணீரை நாம் வீணாக்கினால், பிறகு நமக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு விடும். அதனால்தான் தண்ணீரை வீணாக்காதீர்கள் என்று சொன்னேன். பிறகு உங்கள் விருப்பம்,'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.
ஆனால், அவன் சொன்ன அறிவுரைகளை அந்த பெண்கள் ஏற்றுக் கொள்ளாமல் தண்ணீரை வீணாக்கினர்.
ஆறு ஏழு மாதங்களுக்குப் பின், அந்த ஊர் மக்கள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தினால் வாடினர். அந்நேரத்தில் பிரனேஷ், அக்கிராம மக்களுக்கு, 'டேங்க்கர்' லாரியில் குடிநீரை எடுத்துச் சென்றான்.அந்த ஊர் தெருவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
''நான்தான் இந்த வண்டியின் ஓட்டுனர். உங்களுக்கு நான் தாராளமாக தண்ணீர் கொடுக்கிறேன்,'' என்றான்.
தண்ணீர் குடத்துடன் வந்த பெண்கள்,
பரமாவை பார்த்ததும், வெட்கத்தினால் தலைகவிழ்ந்தபடி நின்றனர். அவனை திட்டியப் பெண்ணோ தன் கையிலிருந்த குடத்தை நழுவ விட்டபடி வெட்கத்தால் தலைகுனிந்தாள்.
''அம்மா! நீங்கள் ஆரம்பத்திலேயே தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தியிருந்தால் உங்கள் தெருவில் தண்ணீர் பஞ்சம் வந்திருக்காது! தெருக் குழாயில் நீங்கள் பிடித்துச் செல்லும் நீரை விட, வீணாக்கும் நீரே அதிகமாகயிருக்கிறது. இனிமேலாவது தண்ணீர் சிக்கனத்தைக் கடைபிடியுங்கள்,'' என்றபடி வண்டியில் உள்ள தண்ணீரைக் கொடுத்தான்.
தன் தவறை உணர்ந்த அந்தப் பெண்கள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த துவங்கினர்.
ரெமோ ரிலீஸ் தேதி
சிவாகார்திகேயேன் கீர்த்தி இனைந்து நடத்த ரெமோ
பாக்கியராஜ் கண்ணண் இயக்தில்
அனிருத் இசையில் அக்டோபர் 7இல் வெளியிடு
அம்மா
1 கேட்க கூச்சபடுவான் என நினைத்து எல்லா உறவினர்கள் வீடுகளிலும் தன் பிள்ளைக்கு தானே பரிமாறுவாள் "அம்மா
2. விக்கல் எடுத்ததும் மகன்தான் நினைக்கிறான் என எண்ணி மகிழ்கிறாள் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய்.
.
3 அளவு சாப்பாடு உள்ள பொழுதுகளில், புதிய காரணத்தை உருவாக்கி விரதம் இருந்து விடுவாள்.. அம்மா..!!
4 தெய்வம் என்று சொல்லமாட்டேன்.. ஏனென்றால், தெய்வமும் சில சமயம் என்னைக் கைவிட்டது.. நீயோ கருவறை முதல் கல்லறை வரை என்னைச் சுமக்கிறாய்
உழைப்பு
புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான தாமஸ் கார்லைல், பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து பிரெஞ்சுப் புரட்சி பற்றிய புத்தகத்தை எழுதி முடித்தார். அதை வெளியிடும் முன்பாக தன்னுடைய நண்பர் ஸ்டூவர்ட் மில்லிடம் படித்துப் பார்த்துக் கொடுக்குமாறு கேட்டார். சில நாட்கள் சென்ற பின் தனது கையெழுத்துப் பிரதியைப் பெற நண்பரிடம் வந்தார். நண்பர் கூறிய பதில் அதிர்ச்சி தந்தது.
அதாவது, அவரது வேலைக்காரி பழைய பேப்பர் என்று நினைத்துக் குப்பையில் போட்டுவிட்டாளாம். தாமஸ் கார்லைலுக்கு எப்படி இருந்திருக்கும்! எத்தனை நாள் உழைப்பு?
என்ன செய்வது? மனம் தளராமல் மீண்டும் பிரெஞ்சுப் புரட்சி பற்றிய புத்தகத்தை எழுதி வெளியிட்டார். உலகப் புகழ்பெற்ற புத்தகங்களில் ஒன்றாக இன்னும் அது திகழ்கிறது.
சில சமயங்களில் மிகச் சாதாரணமாக அசம்பாவி தங்கள் நடந்து விடுகின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலை களில் சோர்ந்து போகாமல் மனதைத் தேற்றிக் கொண்டு முயற்சித்து வெல்வதுதான் மகத்தான சாதனை என்பதை நிரூபித்தார் தாமஸ் கார்லைல்.
.
நீங்களும் தோல்விகளை கண்டு மனம் தளராதீங்க
.
தாமஸ் கார்லைல்,
பற்றி அடுத்த பதிவுகளில் பக்கலாம்
இன்று காமராசு பிறந்தநாள்
காமராசர் (காமராஜர்)
தமிழ் நாட்டின் முன்னாள்
முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு
இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை,
தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் இறந்த பிறகு, 1976 இல் இந்திய அரசு இவருக்குப்
பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும்,
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காமராசரைப் பற்றிய கருத்துக்கள்
* கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராசு, காமராசு மகாபுருசர்.”- காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகர சரசுவதி
*"திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஓர் அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராசர் சென்னை முதல் அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வாரென நான் நம்புகிறேன். - நேரு
*“சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?" - பெரியார்.
, “காமராசு தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.” - இந்திரா காந்தி
*"சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராசை நான் பிள்ளையாகப் பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்."- சிதம்பரம் சுப்ரமண்யம்
"காமராசர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி"- ம.கோ. இராமச்சந்திரன்
Thursday, 14 July 2016
திகில் கதை...!!
பயங்காரமான திகில் கதை.....
பரமசிவம் தன் காரில் பக்கத்து ஊரில் இருந்து வந்து கொன்டு இருந்தான்.இரவு 8
மணி தான் இருந்தால் பயங்கரமான இருட்டு.மழைவேறு பெய்ய தொடங்கியது.ஆள் நடமாட்டம் இல்ல சாலையில் வண்டியை ஓட்டி கொண்டுவந்தான் .தூரத்தில் யாரோ குடையுடன் நிற்பது தெரிந்தது.இவன் வண்டி நிப்பாட்ட சொல்லி சைகை செய்தார்.சங்கருக்கு மனதில் ஒரே குழப்பம் வண்டியை நிப்பாட்டுவதா இல்லை வேண்டாமா என்று.தைரியத்துடன் வண்டியை நிருத்தினான்.மிகவும் வயதானவர் ஒரு கையில் குடையும் மற்றோரு கையில் பெட்டியும் வைத்து இருந்தார்.
அவன் கண்ணாடியை மற்றும் இரக்கி என்ன வேண்டும் என்று கேட்டான்.அதர்க்கு அவர் தன் பெட்டியில் இருந்து இரண்டு புத்தகத்தை நீட்டி வாங்கி கொள்ளும்படி சற்று உயார்த்திய குரலில் சொன்னார்.
அவனும் பயத்தில் வாங்கி கொண்டான்.விலை3000 என்றார் அவனும் காசை கொடுத்துவிட்டு கிளாம்ப பார்த்தான்.ஆனால் அந்த முதியவரோ இவனுக்கு கட்டளை இட்டார் இந்த புத்தகங்களின் கடைசி பக்கத்தை பார்க்காதே மீறி பார்த்தால் அதிர்ச்சியில் உயிர் போய்விடும் என்றார்.
பரமா சரி என்று வாக்கு கொடுத்து விட்டு வீடு வந்து சேர்ந்தான்.புத்
தகங்களை படிக்க தொடங்கினான்.திகில் நிறைந்த கதைகளாய் இருந்தது.புத்தகத்தை படித்து முடித்தான் கடைசி பக்கத்தை பார்காமல் முடிவைத்தான்.
நாட்கள் சென்றன ஆர்வம் தாங்காமல் ஒருநாள் கடைசி பக்கங்களை பார்த்தான் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தான்.கடைசி பக்கத்தில் எழுதி இருந்தது என்ன தெரியுமா உங்களுக்கு?
புத்தகத்தின் விலை15ரூபாய் மட்டுமே.
புத்தி வந்தது
அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
- மிக்ஸி வந்தது;
ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
- கிரைண்டர் வந்தது;
உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
- குக்கர் வந்தது;
விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
- கேஸ் அடுப்பு வந்தது;
வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
- மசாலா பொடி வந்தது;
பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
- பிரிட்ஜ் வந்தது;
மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
- வீடியோ கேம் வந்தது;
பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
- டி.வி. வந்தது;
இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;
இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..
முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..
மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;
1. சர்க்கரை நோய் வந்தது
2.:இரத்தகொதிப்பு வந்தது
3. புற்றுநோய் வந்தது
4. மாரடைப்பு வந்தது
5. ஆஸ்த்துமா வந்தது
6. கொழுப்பு வந்தது
7. அல்சர் வந்தது
இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா?
இன்றைய தத்துவம்
1.நாம் தடுமாறி விழுவது கூட உற்சாகமாக எழுவதற்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்
2.நாணயம் உள்ளம் படைத்தவர்கள் சுடருக்கும் அஞ்சுவதில்லை இருளுக்கும் அஞ்சுவதில்லை
3.வாள்முனை முனை விரைந்து களமாட வேண்டும். பேனா முனை நிதானித்து களமாட வேண்டும்
4.தோல்வி என்பது ஒரு சுற்று தான் தவிர அதுவே முடிவு அல்ல
நண்பேன்டா
ஒரு முன்னணி கட்சியில் இருவருமே இருந்தார்கள். போஸ்டர் ஒட்டுவதில் இருந்து, மேடை அமைப்பது வரை எல்லா வேலைகளையும் சேர்ந்தே செய்வார்கள். எல்லாருமே ஆச்சர்யப்பட்டனர்
ஒருவன் வேலு, மற்றொருவன் தாமு. எங்கு பார்த்தாலும் ஒன்றாகவே இருப்பார்கள். இணை பிரியமாட்டார்கள்.
அப்படிப்பட்ட இருவர்களில் ஒருவர்… இப்பொழுது.?
தாமு, எம்.எல்.ஏ-வாகி அமைச்சராகவும் ஆகி விட்டார். யாருமே எதிர்பார்க்கவில்லை. அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, பத்திரிகையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் இருந்த ஒரு நிருபர் “ஸார், உங்க பிரண்ட் வேலுதானே “உங்களுக்கு பி.ஏ-ன்னு கேட்டார்….
அவர்; இல்லேப்பா, வேறொருத்தரை ஏற்பாடு பண்ணியாச்சுப்பா என்றார் அமைச்சர் தாமூ. எல்லாருக்கும் அதிர்ச்சி.
பத்திரிகையாளர்; கூட்டம் முடிந்து, எல்லோரும் கலைந்து போனவுடன், அந்த நிருபர்; மட்டும் ஒதுங்கி இருந்து “ஸார், ஒங்க பிரண்டு வேலுவை வெட்டிவிட காரணம் தெரிஞ்சுக்கலாமா?” ன்னு கேட்டார்..
“அவன் எப்பொழுதும் நண்பனாக இருக்கவே அசைப்படுகிறேன்” என்றார்; அமைச்சர் தாமு, அந்த பதில் வேலுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. நண்பன் தம்மை மறக்கவில்லை என்று உச்சிகுளிர்ந்து நண்பேன்டா என கட்டியணைத்தான் வேலு, அமைச்சர் தாமுவை!
ஆனால், பதில் சரியில்லையே என்று மனதிற்குள் முனகியவாறே, ஒரு நமுட்டு சிரிப்போடு, பத்திரிகை அலுவலகத்திற்கு புறப்பட்டார் நிருபர். அமைச்சரின் அளவளாவிய அன்பைப் பற்றி எழுத….!?.நண்பேன்டாநண்பேன்டாநண்பேன்டா
இனிய கவிதை உலா
Wednesday, 13 July 2016
வெள்ளை ரோஜா
அழகான கிராமம்,சிட்டுக்குருவிகளின் ஓசையுடன்,விடிகிறது காலைப் பொழுது.மாநிறம் 24 வயதுக்குள் இருக்கும் அவளின் பெயர் லெட்சுமி.அம்மா.. எல்லாம் வேலையும் முடிச்சுட்டேன்.பஸ்சுக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன்மா.அவள் சொன்ன வார்த்தைகளுக்கு,அவள் போன பிறகு வருகிறது பதில்,..சரிம்மா. வீட்டிலிருந்து, 1/2கிலோ மீட்டர் தூரம்தான் பஸ்டாப்.அவள் எதிர்பார்த்த பஸ் வந்தது. ஏம்மா லெட்சுமி ,வீட்ல அம்மா,அப்பா சவுக்கியமா?,என்று பாசத்துடன் விசாரித்தார் பஸ் கண்டக்டர். எல்லாரும் நல்லா இருக்காங்கண்னே என்ற பதிலுடன் முன் வாசல்படி வழியாக பஸ்சில் ஏறினாள்.ஒரு மணி நேரம் பயணத்திற்கு பிறகு அவள் வேலை பார்க்கும் கம்பெனி வந்தது.பஸ்சிலிருந்து இறங்கிய அவள் குனிந்த முகத்துடன் கம்பெனி நோக்கி நடந்தாள்.குனிந்த முகத்தை நிமிரச்செய்யும் வகையில்
கேட்டது அவனின் குரல். லெட்சுமி தினமும் உனக்காக இங்கேயே காத்திருக்கிறேன்,என்னிடம் பேசவில்லை என்றாலும் பரவாயில்லை,என் முகத்தையாவது லேசாக பார்க்கக்கூடாதா?....லெட்சுமி.. லெட்சுமி நில்லு லெட்சுமி. அவன் குரலை காதில் வாங்காமல் நடந்து சென்றாள்.ஆம் அவன், அவள் வயது மதிக்கத்தக்க இளைஞன் ஆவான்.ஆறு மாதங்களாய் இவளையே பின்தொடர்ந்து வருகிறான்.
அன்று மாலை 5 மணி இருக்கும்.
கம்பெனி வேலை முடிந்து லெட்சுமி வீட்டிற்கு செல்ல பஸ்டாண்டிற்கு வந்து கொண்டிருந்தாள்.ஆனால் அவனோ அதே இடத்தில் இவளுக்காக காத்துகொண்டிருந்தான். ஊரே என்னை வெறுக்கும் போது,இவன் மட்டும் ஏன் என் பின்னாடியே சுத்துகிறான் என்று முனங்கியபடி பஸ்சில் ஏறினாள்.இன்று என்ன நடந்தாலும் அவளை பார்த்து பேசிட வேண்டியதுதான் என்று,அவனும் பஸ்சில் ஏறினான்.ஊர் எல்லை வந்தவுடன் இறங்க தயாராக படியின் அருகில் வந்த அவள், கடைசி படியில் அவன் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.பஸ்சை விட்டு இருவரும் இறங்கி ஒருவர் பின் ஒருவராக நடந்து வரும்போது,எதிரே வந்த சிலர் இவளை பார்த்து,நல்ல காரியத்திற்கு போகும்போது இவள் எதிரே வராளே என்று முனங்கியது, இவன் காதில் விழுந்தவுடன் இதயம் துடிப்பது சற்று நின்றது.அவளை நோக்கி சென்றவன்,திரும்பி அவர்களை நோக்கிச்சென்றான்.அவளை பற்றிய விசாரனை அவன் ஆழ் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.பின்பு அவர்களிடம் அவளை பற்றி கேட்டுகொண்டிருக்கும் போது,அவன் விழிகளில் கண்ணீர் ததும்பியது.ஆம் கனவனை இழந்து இரண்டு வருடமாய் அம்மா வீட்டிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.இன்று ஊரே அபச்சகுனமாய் இவளை பார்க்கிறது.
()அதே நேரம் அவள் கதையை தன் தந்தையிடம் கூறி அவளை மணக்க ஆசைப்பட்டான் அவன்.தந்தையை தேடி தோட்டத்திற்கு வந்த அவன் தன் தந்தை முகத்தில் மகிழ்ச்சி நிலவியிருப்பதை கண்டான்.வெட்டி விட்ட வாழக்கன்றுகள் எப்படி துளிர் வருதுன்னு பாருப்பா என்று அவர் கூறியது, அவன் மனதில் திருப்தியை ஏற்ப்படுத்தியது.
பின்பு அவன் அப்பாவிடம் பேசி சமாளித்து,அவளுக்கு மறுவாழ்வு கொடுக்க அவள் வீட்டிற்கு புறப்பட்டான்.
(வெட்டிய வாழக்கன்று துளிர் விடுவதை
பார்த்து சந்தோசப்படும் நாம்!,
அணைத்து உணர்ச்சிகளையும் அடக்கி,
வெட்டிய மஞ்சள் கயிற்றுக்காக,
விதவை வேடத்தில்
வாழும் மனித உயிரை நாம்
ஏன் வாழ வைக்க கூடாது!!!?
சகுனத்தடையாய் அவளை உன் மனம் நினைக்கும் வேளையில்,
நீ போகும் காரியம் வெற்றியாக வேண்டும் என்று நினைப்பவள்தான்
அந்த வெள்ளை ரோஜா!!!!..