பாமக-வின் முயற்சியால் உச்சநீதிமன்றம் மூலம் மதுக்கடைகளை மூட பெற்ற உத்தரவை அடுத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை தகுதி குறைத்து உள்ளூர் சாலையாக அரசுகள் அறிவிக்காமல் இருக்க அனைவரது ஆதரவையும் பெறுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இன்று (06/04/2017) டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் திரு. அரவிந்த் கேஜரிவால் அவர்களை நேரில் சந்தித்து பேசினேன்.
மேலும், நடந்து முடிந்த வடமாநில தேர்தலில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாக பயன்படுத்தி முறைகேடு நடைபெற்றதாக பல தகவல்கள் வந்துள்ளன.
சனநாயகத்தையே கேள்விக்குறியாக்கும் இந்த செயலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டிய முக்கியத்துவத்தையும் அவருடன் விவாதித்தேன்.
#DelhiCM #ArvindKejriwal #AnbumaniRamadoss #PMK #EVM #SCVerdict #BanAlcohol #NoAlcoholOnRoads