Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Saturday, 23 July 2016

இன்றையை சிந்தனைகள்

1. உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே.. உனக்கு துணையாக இருப்பவர் எவ்வளவு பெரிய கடவுள் என்று சோதனையிடம் சொல்..!

2. யானைக்கு கரும்பு தோட்டமே தேவைப்படுகிறது. எறும்புக்கு சக்கையே போதுமானதாக இருக்கிறது. தோட்டம் கிடைக்கும்போது யானையை இரு.. சக்கை கிடைக்கும்போது எறும்பாய் இரு.. வாழ்க்கையில் திருப்தியில்லை என்ற பேச்சுக்கே இடமிருக்காது..!

3. அன்பு இதயத்தில் இருக்கட்டும், அறிவு செயலில் இருக்கட்டும், ஆணவம் காலுக்கடியில் இருக்கட்டும், நம்பிக்கை மட்டும் நம் மொத்த உருவமாக இருக்கட்டும்..!!

4. தடைகளை தட்டிக்கழிப்பதை விட, தகர்த்து விடுவது தான் புத்திசாலித்தனம்...

Friday, 22 July 2016

இக்காலதிற் எற்ற தத்துவம்

1.முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள், அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்

2. என் இறப்பு எவருக்கும் வருத்தம் அளிப்பதாக இல்லாமல் போனாலும், ஒருவர் கூட நிம்மதி பெருமூச்சு விடுவதாக அமைந்துவிடக் கூடாது!!!

3.சந்தோசமாக உள்ளவனிடம் மட்டுமே இவ்வுலகம் நலம்விசாரிக்கும்! கஷ்டத்திலே இருப்பவனோட தொலைபேசிஎண்கள் கண்டிப்பாகபழைய செல்போனோட தொலைஞ்சுபோயிருக்கும்

4. பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இல்லை

5. காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம். காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்.

6. அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது! அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை!!

Wednesday, 20 July 2016

இன்றைய தத்துவம்

:1. நம்மை தேடி வாய்ப்புகள் வரட்டும்னு
கெளரவதோட காத்துயிருந்த
அப்பறம் நாக்கு வறண்டு
பின்னாடி வாழ்க்கையே வறண்டு
போய் தான் புத்தி வரும்.

2. நாடு உங்களுக்கு என்ன செய்தது என்று கேட்பதைவிட, உங்களால் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்டுப்பார்க்க வேண்டும்

3. சிலரை ஏன் சந்தித்தோம் என்றும் சிலரை ஏன் இவ்வளவு தாமதமாய் சந்திக்க நேர்ந்தது என்றும் தோன்றுவதே வாழ்க்கை

4. நாம் தேடிச்செல்வோரை விட, நம்மை தேடி வருவோர் மீது அதிகம் அன்பையும் அக்கறையும் செலுத்துங்கள்..

Tuesday, 19 July 2016

இன்றைய தத்துவம்

1. நாம் காட்டும் பணிவிற்கும் மரியாதைக்கும் பதிலாக ஏதேனும் ஒரு நன்மையைப் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்போமேயானால் நம்மிடம் உண்மையான அன்பு உருவாகாது

2. உங்கள் கௌரவம் உங்கள் நாக்கின் நுனியில்தான் இருக்கிறது.

3. நீ யாருக்கும் பக்கத்திலிருக்காதே, தூரத்திலேயே இரு.. பக்கத்தில் இருக்கும் இமையைப் பார்க்க முடியாத கண்கள், தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்தைப் பார்த்து விடுகின்றன

4. அறிவை விட கற்பனை முக்கியமானது. அது நம்மை உறுதியாக நம்ப வைத்து, இருபது மடங்கு ஆற்றலுடன் இலட்சியத்தை நோக்கி செயல்ப்படும் வீரராக உருவாக்கிவிடும் சக்தி படைத்தது

Sunday, 17 July 2016

இன்றைய தத்துவங்கள்

'.1.வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு எதிரியாவது தேவை

2. ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட
தோற்பது எப்படி என்று யோசித்து பார்
நீ
ஜெயித்து விடுவாய்

3. யார் என்ன சொன்னாலும்
உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே
ஒரு சமயம் நீ  மாற்றினால்
ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்

4. அவமானங்களை சேகரித்து வை
வெற்றி உன்னை தேடி வரும்

5.
தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்
வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்

Saturday, 16 July 2016

இன்றைய சிந்தனைகள்

1.வாழ்க்கை மிக சுவையானது.. உங்கள் அறியாமையினால் அதைக் கசப்பாக்கி விடாதீர்கள்..

2. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தலாகவும், கிழிசலாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.

3. முடிவு தெரியாத நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டே இருக்கும்

4. யாருக்கேனும் குழி தோண்டவும், எவர் மீதாவது மன்னைப் போடவும் விரும்பினால், அதை "விதைகளுக்கு" செய்யவும்..

Friday, 15 July 2016

அம்மா

  1 கேட்க கூச்சபடுவான் என நினைத்து எல்லா உறவினர்கள் வீடுகளிலும் தன் பிள்ளைக்கு தானே பரிமாறுவாள் "அம்மா

2. விக்கல் எடுத்ததும் மகன்தான் நினைக்கிறான் என எண்ணி மகிழ்கிறாள் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய்.
.
3 அளவு சாப்பாடு உள்ள பொழுதுகளில், புதிய காரணத்தை உருவாக்கி விரதம் இருந்து விடுவாள்.. அம்மா..!!

4 தெய்வம் என்று சொல்லமாட்டேன்.. ஏனென்றால், தெய்வமும் சில சமயம் என்னைக் கைவிட்டது.. நீயோ கருவறை முதல் கல்லறை வரை என்னைச் சுமக்கிறாய்

Thursday, 14 July 2016

புத்தி வந்தது

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
   - மிக்ஸி வந்தது;

ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
   - கிரைண்டர் வந்தது;

உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
   - குக்கர் வந்தது;

விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
   - கேஸ் அடுப்பு வந்தது;

வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
   - மசாலா பொடி வந்தது;

பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
   - பிரிட்ஜ் வந்தது;

மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
   - வீடியோ கேம் வந்தது;

பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
   - டி.வி. வந்தது;

     இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

     இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

               முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா?

இன்றைய தத்துவம்

1.நாம் தடுமாறி விழுவது கூட உற்சாகமாக எழுவதற்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்

2.நாணயம் உள்ளம் படைத்தவர்கள் சுடருக்கும் அஞ்சுவதில்லை இருளுக்கும் அஞ்சுவதில்லை

3.வாள்முனை முனை விரைந்து களமாட வேண்டும். பேனா முனை நிதானித்து களமாட வேண்டும்

4.தோல்வி என்பது ஒரு சுற்று தான் தவிர அதுவே முடிவு அல்ல

Wednesday, 13 July 2016

வலி


"ஒருவன் உன்னை ஒரு முறை அடித்தால் அது அவனுடைய தவறு.அவனிடம் இரண்டாவது முறையும் அடி வாங்கினால் அது உன்னுடைய தவறு."

இன்றையா 4 தத்துவம்

1.   தோல்விகள் சூழ்ந்து கொண்டிருந்தாலும் ,
வெற்றியை நோக்கி பயணித்துக்  கொண்டே இருங்கள்  .....
முடியும் வரை அல்ல ,
இலக்கினை அடையும் வரை .

2.கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.

3. அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையைப் பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

4.நீ ஓழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது. நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.

Tuesday, 12 July 2016

இன்றைய தத்துவங்கள்

1.தூக்கி எறியப்படும் தருணங்களில் தான் சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கிறது..

2. நீ ஓழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது. நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது. -

3. விதி ஒரு கதவை மூடும் போது, நம்பிக்கை இன்னொரு கதவை திறக்கிறது..

Monday, 11 July 2016

வரதட்சணை


"வரதட்சணை கேட்பதை நிறுத்தினாலே போதும்.
பெண் பிள்ளைகள் பாரமாகத்  தெரியாது நிறைய பேருக்கு."

இன்றைய தத்துவங்கள்

1.வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான்.

2.உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!

3.பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

4.நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.

5.கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

Sunday, 10 July 2016

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!