Saturday, 6 August 2016

நன்பர்கள் தின வாழ்த்து

என் சகோதரன் என் சட்டையை
பயன்படுத்தினால் கூட
எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ
எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது.

காதலியோடு பேசுகையில் கூட
முகமூடி அணிந்து பேசுகிறேன்.
ஆனால் என் நட்பின் முன்னாலோ
எவ்வித முகமூடியுமின்றி
நான் நானே இயல்பாய் இருக்கிறேன்.

கடற்கரையில் ஒன்றாய் குளித்த நாட்கள்..
பேருந்தில் செய்த குறும்புகள்...
மொட்டை மாடி அரட்டைகள்..
பள்ளி மைதான விளையாட்டுகள்...
என அத்தனை நினைவுகளும்
இன்னமும் பசுமையாய் இதயத்தில்....

நண்பனின் கை அருகில் இருக்கையில்
நம்பிக்கையும் கூடவே...

வீட்டில் பெற்றோர் இல்லா நேரங்கள் சொர்க்கம்..
நண்பர்கள் மட்டுமே சுற்றி இருந்து,
ஒருவர் மீது ஒருவர் படுத்து,
அடித்து விளையாடி,
கண்ட கண்ட சேனல் மாற்றி,
பக்கத்து வீட்டில் திட்டு வாங்கி,
சமைக்க தெரியாமல் சமைத்து,
காஃபி என்ற பெயரில் ஏதோ அருந்தி,
என சந்தோஷங்களோடே
வாழ்ந்த காலங்கள் வரம்..

இன்று வித விதமான பைக்கில்
பயணம் செய்தாலும் கிடைப்பதில்லை
நண்பனின் பின்னால் அமர்ந்து
சைக்கிளில் டபுள்ஸ் போன சுகம்.. 

ஒன்றாய் அமர்ந்து படிக்கிறோம்
என்ற பெயரில் பாடத்தை தவிர
அனைத்தை பற்றியும்
பேசிக்கொண்டு இருப்போம்.. 

அப்பாவிற்கு மட்டுமே
கடிதம் வரும் காலங்களில்
எனக்கும் கடிதம் வந்திருக்கிறது என
பெருமைப்பட்ட நேரங்கள்..
ஆம் நண்பனிடமிருந்து வந்த
ஒற்றை கிரீட்டிங் கொடுத்த மகிழ்ச்சி..

பள்ளி நாட்களில் உணவு கொண்டு வராத
சமயங்களில் நண்பர்களிடமிருந்து
பகிர்ந்து உணவு உண்ட சமயங்கள்
மீண்டும் எப்போது கிடைக்கும்?

நண்பர்களிடம் சண்டை போட்டு
பேசாமல் இருந்த காலங்களை நினைத்து
பார்க்கையில் இப்போது சிரிப்பாய் இருக்கிறது.

பள்ளி முடிந்ததும்
சீருடை தொலைக்கிறோம்.
வளரத்தொடங்கியதும்
நட்பை தொலைக்கிறோம்.

எத்தனை எத்தனை சந்தோஷமான
தருணங்கள் நட்பில்..
அத்தனையும் தொலைக்கிறோம்
இயந்திரத்தனமான வாழ்க்கையின் இடையே...

வாழ்க்கை வேகத்தில் நண்பர்கள்
எங்கெங்கோ சிதறி போகிறோம். 
என்றேனும் ஒரு நாள்
நாம் அனைவரும் ஒன்றாய் எடுத்து கொண்ட
புகைப்படத்தை பார்க்க நேர்கையில்
விழியின் ஓரமாய் கசியும் கண்ணீருக்கு
என்ன பதில் சொல்ல போகிறோம்?

கடவுள்
சங்கடத்தை அனுபவிக்க
காதலை அனுப்புகிறார்...
சந்தோஷத்தை அனுபவிக்க
நட்பை அனுப்புகிறார்...

என் இதயத்தின் அத்தனை
அறைகளிலும் நிறைந்து இருக்கும்
என் நண்பர்கள் அனைவருக்கும்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

Friday, 5 August 2016

முகத்தில் உள்ள தேமல் பரு தழும்பு நீங்க

முகத்தில் ஏற்படும் வேறு சில பிரச்சனைகளுக்கான கை வைத்தியங்கள்:-

முகத் தேமல் மறைய :

பூவரசன் விதையைச் சுத்தம் செய்து கழுவத்தில் எலுமிச்சை விட்டு அரைத்து தேமலின் மீது தடவி ஊற வைத்து வெந்நீரில் கழுவி வர தேமல் மறையும். இதே போல துவர்பாக்கு, வில்வ இலை, அவுரி சமூலம், வேப்பம்பட்டை, நில வேம்பு, கஸ்தூரி மஞ்சள் இவற்றைத் தனித் தனியே இடித்து சலித்து, கலந்து வைத்துக் கொண்டு சிறிது பொடியை நீரில் குலைத்து தேமல் உள்ள இடங்களில் நன்றாகப் பூச ஊற வைத்துக் குளிக்க தேமல் மறையும்.

முகத்தில் தழும்புகள் நீங்க

:அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வர தழும்புகள் படிப்படியாக மறையும்.

Thursday, 4 August 2016

முகப்பருவா அதை போக்க இதோ வழி

இன்றைய இளைஞர்களுக்கு பரு தான் முக்கிய எதிரியாக உள்ளது. அடிப்படையில் ஆரோக்கியமான தூக்கத்தை கடை பிடிப்பது நல்லது. பச்சைத் தண்ணீரில் குளித்து அதிக எண்ணெய் இல்லாத உணவை சாப்பிடுவது நல்லது. அது போல முகம் கழுவாமல் பவுடர் போட்டாலும் பரு வரும். சரி பரு வருவதற்கு என்ன தான் காரணம். வாருங்கள் பார்ப்போம். பரு பெரிய அளவில் வருகிறதே என்ற கவலை இன்றைய தலை முறை இளசுகளுக்கு அதிகம் உள்ளது. உண்மையில் கொழுப்புப் பொருள் அதிகமானால், வியர்வை மூலம் வெளியேறாமல் முகத்தில் தேங்கும் சமயத்தில் பருவாக அவைகள் உரு மாறுகிறது. பரு வந்து விட்டால் நகம் படாமல் பாதுக்காப்பது நல்லது. சிலர் பருவை கோபத்தில் கில்லி விடுவதை பார்க்க முடிகிறது. அவ்வாறு செய்தால் பரு மேலும், மேலும் அதிகமாகிக் கொண்டு தான் போகும். அதனால் பரு வந்து விட்டால் அதனை முதலில் கில்லி விடுதல் கூடாது. அத்துடன் கொழுப்புப் பொருட்களை தவிர்க்க வேண்டும். உதாரணமாக தயிர், மாமிசம், சாக்லெட், ஐஸ்க்ரீம், வறுவல் பொறித்த பலகாரங்களை சாப்பிடக் கூடாது. பருவுக்கு இன்னொரு முக்கியக் காரணம் மலச்சிக்கல் தான். இந்த மலச் சிக்கலை போக்க தினமும் சாப்பாட்டில் கீரையை சேர்த்துக் கொள்வது நல்லது. இது தவிர குறைந்தது எட்டு டம்பளர் தண்ணியாவது தினமும் குடிக்க வேண்டும். அப்படியே பருக்கள் ஒரு வேளை பெருத்து பருத்து பழுத்து விட்டால் கவலைப் படாதீர்கள் பச்சரிசி மாவுடன் சிறிது மஞ்சளை அரைத்து அதைச் சூடாகக் கிளறி, கட்டியின் மேல் வைத்து, பிறகு காலையில் மருந்து சோப்பு போட்டு சற்று சூடான நீரால் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். பயத்தம் பருப்பு போட்டுக் குளித்தாலே எந்தத் தோல் வியாதிகளும் வராது. அது போல ஆயுர்வேத சோப்புகள் போட்டுக் குளிப்பது பரு போன்றவை வராமல் தடுக்கும். இது தவிர நான் ஏற்கனவே கூறிய படி ஆவிக் குளியல் செய்யலாம். ஆவிக் குளியல் செய்த பிறகு குளிர்ந்த நீரால் லேசாக சோப்புப் போட்டு முகத்தைக் கழுவி விடவும். அதுபோல செயற்கையான க்ரீம், பவுடர் இவற்றுக்குப் பதிலாக, துளி பாலேடு முகத்தில் தடவிக் கொண்டு, பிறகு கழுவினால் முகம் பளபளப்பாக மெருகேறி இருக்கும்.

முகப் பருக்கள் போக இதோ சில டிப்ஸ்:-
1. தேனுடன் சிறிது லவங்கப்பட்டை தூளைச் சேர்த்து முகத்தில் தடவலாம். கடுகை சிறிது தேனுடன் கலந்து முகத்தில் தடவலாம். அவ்வாறு தடவினால் முகப் பரு பிரச்சனை தீரும்.

2. மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். முகம் கழுவ சோப் அதிகமாக பயன்படுத்தாதீர்கள்.

3. தினமும் குளிக்கும்போது முகத்தில் சோப்புக்குப் பதில் பாசிப்பயறு மாவைத் தேய்த்துக் குளித்துவர முகம் பொலிவு பெறும். கரும் புள்ளிகள் மறையும்.

4.தக்காளி சாற்றினை முகத்தில் தடவிவர முகப்பரு நீங்கும்.

5. காய்ச்சாத பாலை முகத்தில் தடவிவர, முகப்பரு நீங்கும்.

Tuesday, 2 August 2016

ஒட்டகத்திற்கு நேர்ந்த கவலை


குறள் :
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

குறள் விளக்கம் :

 ஒருவனுடைய சோம்பலில் மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

கதை :

 ஒரு ஒட்டகம் காட்டில் தவம் மேற்கொண்டிருந்தது. அந்தத் தவத்தின் பெருமையை உணர்த்த பிரம்ம தேவர் ஒட்டகத்திற்குக் காட்சியளித்தார். என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.

 இருந்த இடத்தில் இருந்த படியே உணவைப் பெரும் வகையில் என் கழுத்து நீண்டதாக இருக்க வேண்டும். அந்த நீளமான கழுத்தோடு நான் காட்டில் உலா வர வேண்டும் என்று கேட்டது. அவ்வாறே பிரம்ம தேவர் வரமளித்தார். அந்த வரத்தைப் பெற்ற பின் ஒட்டகம் உணவிற்காக அதிகம் முயற்சிக்கவில்லை. நீண்ட கழுத்துடன் எங்கும் திரிந்தது. உணவு எளிதாகக் கிடைத்தது. இதனால் சோம்பல் உற்றது ஒட்டகம்.

 ஒருநாள் ஒட்டகம் அப்படி உலவிக் கொண்டிருந்த போது பெருங்காற்று வீசியது. மழை பெய்தது. அறிவற்ற அந்த ஒட்டகம் தன் தலையை ஒரு குகையில் நீட்டிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மழைக்குப் பயந்து தன் மனைவியுடன் ஒரு நரி அந்தக் குகைக்குள் நுழைந்தது.

 குளிராலும் பசியாலும் வாடிய நரித் தம்பதியர்க்கு மிகப் பெரிய வாய்ப்பாக ஒட்டகத்தின் கழுத்து உணவாக அமைந்தது. ஒட்டகத்தின் இருபுறமும் இருந்துக் கொண்டு நரிகள் ஒட்டகத்தின் கழுத்தைக் கடித்து வேண்டிய அளவு மாமிசத்தைப் புசித்தன.

 தனக்கு நேர்ந்த ஆபத்தை உணர்ந்த ஒட்டகம் தனது கழுத்தை சுருக்க முயற்சித்தது. நீண்ட கழுத்தைச் சுருக்க அரும்பாடுபட்டது. அதற்குள் நரிகள் ஒட்டகத்தின் கழுத்துப் பகுதி முழுதும் சாப்பிட்டு விட்டன. ஒட்டகம் மாண்டு போயிற்று.

நீதி :

சோம்பல் சில சமயம் உயிருக்கு ஆபத்தாக மாறி விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.



Monday, 1 August 2016

ஒலிம்பிக் - ஒரு இந்தியக் கனவு

வறுமையின் கோரப்பிடியில் இருக்கும் ஆப்ரிக்க நாடுகளான கென்யா,உகாண்டா,எத்தியோப்பியா,மொராக்கோ போன்ற நாடுகளின் வீரர்கள் தான் நீண்ட தூர தடகள போட்டியின் முடிசூடா மன்னர்கள்.  பெரும்பாலன மக்கள் மூன்று வேலை உணவுக்கே கஷ்டப்படும் ஆப்ரிக்க நாடுகளால் எப்படி ஒலிம்பிக் தடகள களத்தில் பதக்கங்களை அள்ள முடிகிறது.

ஆப்ரிக்கர்களின் தடகளதிறனும், சீனர்களின் ஜிம்னாஸ்டிக் திறனும் இந்தியர்களுக்கு இல்லையா?? இயற்கையான உடல், மனத்திறன்களில் எந்த நாட்டவருக்கும் குறைந்தவர்கள் அல்ல இந்திய உழைப்பாளி மக்கள். ஆனால், பதக்க பட்டியலில் இந்த தேசங்களின் அருகே கூட இந்தியா வரமுடியாமல் பட்டியலை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
இந்திய கிராமங்களிலும், சேரிகளிலும் பல உலக விளையாட்டு சாம்பியன்கள் முகவரியற்று இருக்கின்றனர். அவர்களை அடையாளம் காணும் அளவுக்கு செயல்நோக்கம் நிறைந்த விளையாட்டு துறை நம்மிடையே இல்லை.
  குறைந்தது பல கஷ்டங்களுக்கிடையில் முன்னுக்கு வருபவர்களை சாதியின் பெயரால் புறக்கணிக்காமல் இருந்தால் ஒரு தடகள சாம்பியனாவது இந்தியாவுக்கு கிடைததிருப்பான்.  பணம், அந்தஸ்து, சிபாரிசு போன்றவைகள் விளையாடமல் இருந்தால் ஒலிம்பிக் களத்தில்சிறுத்தையாய் விளையாடும் வீரர்கள் நமக்கு கிடைத்திருப்பார்கள்.
  மிக உயரத்தில் இருந்து கிணற்றுக்குள் டைவ் அடித்து குதிக்கும் இந்திய கிராமத்து இளைஞனை பயிற்சி அளித்து ஒலிம்பிக்கிற்கு அனுப்பினால் டைவிங் பிரிவில் தங்கம் நமக்குதானே..
உண்டிவில்லை வைத்து தூரத்து ஓணானை அடிக்கும் இந்திய கிராமத்து இளைஞனை பயிற்சி அளித்து அனுப்பினால் துப்பாக்கி சுடுதலில் தங்கம் அள்ளிவந்து விடமாட்டானா...
காட்டிலும் மேட்டிலும் பாறைகளிலும் காலில் செருப்பு கூட இல்லாமல் ஓடிவிளையாடும் இந்திய கிராமத்து இளைஞன் முறையான பயிற்சியுடன் ஒலிம்பிக்கிற்கு சென்றால் உசைன் போல்டுக்கு சவால் விட மாட்டானா....
சுலபமாக வேலி தாண்டி மாம்பழங்களை பரித்துவரும் கிராமத்து சுட்டிபையனை உயரம் தாண்டுதலுக்கு பயிற்சி அளித்தால் உலக சாம்பியன்களை மிரளவைக்க மாட்டானா...
ஆனால், வீரர்களின் குறுக்கே நிற்பது சாதி, பணம், அரசியல் குறுக்கீடு ஆகிய வேலிகளே... வரும் தலைமுறை அதை தகர்க்க தயாராகட்டும்...
   - சரண்

நம்பிக்கை

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...

👉விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு 👈

           🗣
👉தோற்றால் புலம்பாதே . . .
போராடு 👈

             🗣
👉 கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு 👈

              🗣
👉தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு 👈

               🗣
👉நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி👈

                🗣
👉ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் 👈

           🗣
👉நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை 👈

              🗣
👉கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு 👈

              🗣
👉  உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு 👈

           🗣
👉 கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு 👈

           🗣
👉மொத்தத்தில் நீ பலமாவாய் 👈

              🗣
👉சித்தத்தில் நீ பக்குவமாவாய் 👈


💐💐💐💐💐💐💐💐
💐உன்னால் முடியும் .💐

💐உயர முடியும் . . .
  💐

             
💐உதவ முடியும் . . .
  💐

💐💐💐💐💐💐💐💐
⚜உனக்கு உதவ நீ தான் உண்டு ⚜

❇❇❇❇❇❇❇
👉உன்னை உயர்த்த நீ தான் 👈. . . ⚜நம்பு⚜ . .

✳✳✳✳✳✳✳✳
👉 உன்னை மாற்ற நீ தான் 👈. . .👉 முடிவெடு👈 . . .

                👤
👉நீயே பாறை👈👉.நீயே உளி . 👈. .

             👤
👉நீயே சிற்பி . . .நீயே செதுக்கு 👈. . .

                 👤
👉நீயே விதை . . .நீயே விதைப்பாய் 👈. . .
                     👤
👉நீயே வளர்வாய் 👈. 👉நீயே அனுபவிப்பாய் 👈. . .

                  👤
👉நீயே நதி👈 . . .👉 நீயே ஓடு👈 . . .

                   👤
👉நீயே வழி👈 . . .👉 நீயே பயணி👈 . . .

                  👤
👉நீயே பலம் 👈. . . 👉நீயே சக்தி 👈. . .

                    👤
🌸நீயே ஜெயிப்பாய் 🌸.

💯எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே🌸

உதவியின் சிறப்பு


குறள் :

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

குறள் விளக்கம் :

 என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.

கதை :

 ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது.

 அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது.

 சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள்.

 ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது.

 அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது.

 முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான்.

 இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர்.

 சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான்.

 இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான்.

நீதி :

ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.



Sunday, 31 July 2016

தலைவலி குறைய இரத்த அழுத்தம் மலச்சிக்கல் குறைய

தலைவலி குறைய

அகத்தி இலைச்சாறை 1 லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிப்பதற்கு முன் மஞ்சள், சாம்பிராணி தூள் போட்டுக் கலக்கி வடிகட்டி வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.

இரத்த அழுத்தம் குறைய

இரத்த அழுத்தம் குறைய அகத்தி கீரை, சுண்ட வத்தல் ஆகியவைகளை சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.

மலச்சிக்கல் குறைய

அகத்தி கீரையை பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் குறையும்.

எண்ணெய்ப் பசை கொண்ட முகம் உண்மையில் ஒரு வரப் பிரசாதம் தான்

Iஎண்ணெய்ப் பசை கொண்ட முகம் உண்மையில் ஒரு வரப் பிரசாதம் தான்

எண்ணெய்ப் பசை உள்ள முகமாக உள்ளதே என்று சிலர் கவலைப் படலாம். அத்துடன் முகத்தில் எத்தனை முறை சோப்புப் போட்டாலும் முகத்தில் எண்ணெய் வழிகிறதே என்று கூட நீங்கள் நினைக்கலாம். உங்களுக்கு ஒரு ரகசியத்தை சொல்கிறேன் கேளுங்கள்? உண்மையில் நீங்கள் கடவுளின் வரம் பெற்றவர்கள். ஏனெனில் எண்ணெய்ப் பசைக் கொண்ட சருமம் சீக்கிரத்தில் முதுமையை ஏற்காது. அதாவது தோல் சுருங்குவதைத் தடுக்கும். அத்துடன் வெயில் காலங்களில் தோல் சொரசொரத்துப் போவதையும் தடுக்கும். இது ஆய்வில் கண்ட உண்மை.