Showing posts with label அழகு குறிப்பு. Show all posts
Showing posts with label அழகு குறிப்பு. Show all posts

Friday, 5 August 2016

முகத்தில் உள்ள தேமல் பரு தழும்பு நீங்க

முகத்தில் ஏற்படும் வேறு சில பிரச்சனைகளுக்கான கை வைத்தியங்கள்:-

முகத் தேமல் மறைய :

பூவரசன் விதையைச் சுத்தம் செய்து கழுவத்தில் எலுமிச்சை விட்டு அரைத்து தேமலின் மீது தடவி ஊற வைத்து வெந்நீரில் கழுவி வர தேமல் மறையும். இதே போல துவர்பாக்கு, வில்வ இலை, அவுரி சமூலம், வேப்பம்பட்டை, நில வேம்பு, கஸ்தூரி மஞ்சள் இவற்றைத் தனித் தனியே இடித்து சலித்து, கலந்து வைத்துக் கொண்டு சிறிது பொடியை நீரில் குலைத்து தேமல் உள்ள இடங்களில் நன்றாகப் பூச ஊற வைத்துக் குளிக்க தேமல் மறையும்.

முகத்தில் தழும்புகள் நீங்க

:அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வர தழும்புகள் படிப்படியாக மறையும்.

Thursday, 4 August 2016

முகப்பருவா அதை போக்க இதோ வழி

இன்றைய இளைஞர்களுக்கு பரு தான் முக்கிய எதிரியாக உள்ளது. அடிப்படையில் ஆரோக்கியமான தூக்கத்தை கடை பிடிப்பது நல்லது. பச்சைத் தண்ணீரில் குளித்து அதிக எண்ணெய் இல்லாத உணவை சாப்பிடுவது நல்லது. அது போல முகம் கழுவாமல் பவுடர் போட்டாலும் பரு வரும். சரி பரு வருவதற்கு என்ன தான் காரணம். வாருங்கள் பார்ப்போம். பரு பெரிய அளவில் வருகிறதே என்ற கவலை இன்றைய தலை முறை இளசுகளுக்கு அதிகம் உள்ளது. உண்மையில் கொழுப்புப் பொருள் அதிகமானால், வியர்வை மூலம் வெளியேறாமல் முகத்தில் தேங்கும் சமயத்தில் பருவாக அவைகள் உரு மாறுகிறது. பரு வந்து விட்டால் நகம் படாமல் பாதுக்காப்பது நல்லது. சிலர் பருவை கோபத்தில் கில்லி விடுவதை பார்க்க முடிகிறது. அவ்வாறு செய்தால் பரு மேலும், மேலும் அதிகமாகிக் கொண்டு தான் போகும். அதனால் பரு வந்து விட்டால் அதனை முதலில் கில்லி விடுதல் கூடாது. அத்துடன் கொழுப்புப் பொருட்களை தவிர்க்க வேண்டும். உதாரணமாக தயிர், மாமிசம், சாக்லெட், ஐஸ்க்ரீம், வறுவல் பொறித்த பலகாரங்களை சாப்பிடக் கூடாது. பருவுக்கு இன்னொரு முக்கியக் காரணம் மலச்சிக்கல் தான். இந்த மலச் சிக்கலை போக்க தினமும் சாப்பாட்டில் கீரையை சேர்த்துக் கொள்வது நல்லது. இது தவிர குறைந்தது எட்டு டம்பளர் தண்ணியாவது தினமும் குடிக்க வேண்டும். அப்படியே பருக்கள் ஒரு வேளை பெருத்து பருத்து பழுத்து விட்டால் கவலைப் படாதீர்கள் பச்சரிசி மாவுடன் சிறிது மஞ்சளை அரைத்து அதைச் சூடாகக் கிளறி, கட்டியின் மேல் வைத்து, பிறகு காலையில் மருந்து சோப்பு போட்டு சற்று சூடான நீரால் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். பயத்தம் பருப்பு போட்டுக் குளித்தாலே எந்தத் தோல் வியாதிகளும் வராது. அது போல ஆயுர்வேத சோப்புகள் போட்டுக் குளிப்பது பரு போன்றவை வராமல் தடுக்கும். இது தவிர நான் ஏற்கனவே கூறிய படி ஆவிக் குளியல் செய்யலாம். ஆவிக் குளியல் செய்த பிறகு குளிர்ந்த நீரால் லேசாக சோப்புப் போட்டு முகத்தைக் கழுவி விடவும். அதுபோல செயற்கையான க்ரீம், பவுடர் இவற்றுக்குப் பதிலாக, துளி பாலேடு முகத்தில் தடவிக் கொண்டு, பிறகு கழுவினால் முகம் பளபளப்பாக மெருகேறி இருக்கும்.

முகப் பருக்கள் போக இதோ சில டிப்ஸ்:-
1. தேனுடன் சிறிது லவங்கப்பட்டை தூளைச் சேர்த்து முகத்தில் தடவலாம். கடுகை சிறிது தேனுடன் கலந்து முகத்தில் தடவலாம். அவ்வாறு தடவினால் முகப் பரு பிரச்சனை தீரும்.

2. மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். முகம் கழுவ சோப் அதிகமாக பயன்படுத்தாதீர்கள்.

3. தினமும் குளிக்கும்போது முகத்தில் சோப்புக்குப் பதில் பாசிப்பயறு மாவைத் தேய்த்துக் குளித்துவர முகம் பொலிவு பெறும். கரும் புள்ளிகள் மறையும்.

4.தக்காளி சாற்றினை முகத்தில் தடவிவர முகப்பரு நீங்கும்.

5. காய்ச்சாத பாலை முகத்தில் தடவிவர, முகப்பரு நீங்கும்.

Sunday, 31 July 2016

எண்ணெய்ப் பசை கொண்ட முகம் உண்மையில் ஒரு வரப் பிரசாதம் தான்

Iஎண்ணெய்ப் பசை கொண்ட முகம் உண்மையில் ஒரு வரப் பிரசாதம் தான்

எண்ணெய்ப் பசை உள்ள முகமாக உள்ளதே என்று சிலர் கவலைப் படலாம். அத்துடன் முகத்தில் எத்தனை முறை சோப்புப் போட்டாலும் முகத்தில் எண்ணெய் வழிகிறதே என்று கூட நீங்கள் நினைக்கலாம். உங்களுக்கு ஒரு ரகசியத்தை சொல்கிறேன் கேளுங்கள்? உண்மையில் நீங்கள் கடவுளின் வரம் பெற்றவர்கள். ஏனெனில் எண்ணெய்ப் பசைக் கொண்ட சருமம் சீக்கிரத்தில் முதுமையை ஏற்காது. அதாவது தோல் சுருங்குவதைத் தடுக்கும். அத்துடன் வெயில் காலங்களில் தோல் சொரசொரத்துப் போவதையும் தடுக்கும். இது ஆய்வில் கண்ட உண்மை.

Saturday, 30 July 2016

ஆண்களே! - பெண்களை வசிகரிக்கும் அழகுக் குறிப்புகள் உங்களுக்காக பகுதி 2

நல்ல மாய்ஸ்சுரைசர் 

தினமும் இரண்டு முறை சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டியது அவசியம். இதனால் சருமம் வறட்சியடைவது தடுக்கப்பட்டு, சருமத்தில் வெடிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும். அதில் பகலில் நீர்மமான மாய்ஸ்சுரைசரையும், இரவில் அடர்த்தியான மாய்ஸ்சுரைசரையும் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் போதிய நீர்ச்சத்துடன் இருக்கும். 


பழங்கள் மற்றும் காய்கறிகள் அடிக்கடி டீ, காபி குடிக்கும் பழக்கத்தைத் தவிர்த்து, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உண்ணும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். இதனால் சருமத்திற்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, சரும செல்கள் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். எனவே அழகை அதிகரிக்க விரும்பினால், ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பௌல் சாலட் சாப்பிடுங்கள். 

உப்பை குறைத்துக் கொள்ளுங்கள்


 உணவின் சுவையை அதிகரிக்க உப்பு, சர்க்கரை போன்றவை அவசியம் தான். ஆனால் அதை அளவுக்கு அதிகமாக சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள். குறிப்பாக உப்பை தவிர்த்திடுங்கள். ஏனெனில் உப்பு முகத்தை வீங்கச் செய்யும். எனவே உணவில் அளவாக உப்பை சேர்த்து சாப்பிடுங்கள். 

நல்ல தூக்கம் முக்கியமாக இரவில் 7-8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இந்நேரத்தில் தான் பாதிக்கப்பட்ட சரும செல்கள் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும். ஆனால் அந்த ஓய்வு சரியான அளவில் கிடைக்காவிட்டால், முகம் பொலிவிழந்து தான் காட்சியளிக்கும்.

Friday, 29 July 2016

ஆண்களே! - பெண்களை வசிகரிக்கும் அழகுக் குறிப்புகள் உங்களுக்காக

பொதுவாக இந்திய ஆண்கள் தங்கள் சருமத்தின் மீது அதிக அக்கறை காட்டிக் கொள்ளமாட்டார்கள். இதனால் தான் அவர்களுக்கு சருமத்தில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக முகப்பருக்கள், பொலிவிழந்த முகம், சருமத்தில் சுருக்கம் போன்றவை இந்திய ஆண்களின் அழகையும், இளமைத் தோற்றத்தையும் பாதிக்கின்றன. அக்காலத்தில் ஆண்கள் அழகின் மீது அக்கறை காட்டாமல் இருந்ததற்கு காரணம், அவர்களது மாசற்ற சுற்றுச்சூழல் தான். ஆனால் இப்போதோ மாசுக்கள் இல்லாத இடங்களே இல்லை. இதனால் முதலில் பாதிக்கப்படுவது நம் சருமம் தான். ஆகவே இக்காலத்தில் ஆண்கள் தங்கள் சருமத்தின் மீது அக்கறையின்றி இருந்தால், விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெற வேண்டியது தான். இங்கு ஆண்களின் அழகை அதிகரிக்க தினமும் பின்பற்ற வேண்டியது என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் சரும பிரச்சனைகள் வருவதைத் தவிர்க்கலாம். அப்பட்டியல் பின்வருமாறு

தண்ணீர்

சருமத்தின் சிறந்த நண்பன் தண்ணீர் தான். சரும அழகை அதிகரிக்க வேண்டுமானால் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். நேச்சுரல் ஸ்கரப் காற்று மாசுபாட்டினால் சரும செல்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றன. இதனால் முகம் பொலிவிழந்து அசிங்கமாக இருக்கிறது. ஆகவே வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், கெமிக்கல் பொருட்களைக் கொண்டு சருமத்தை பராமரிப்பதைத் தவிர்த்து, இயற்கைப் பொருட்களான கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி தேய்த்து கழுவ, முகத்தில் உள்ள அழுக்குகள் முழுவதும் நீங்குவதோடு, முகத்தில் உள்ள தழும்புகளும் மறைந்து, முகம் அழகாக காட்சியளிக்கும்

. சன் ஸ்க்ரீன் 

ஓசோன் மண்டலத்தில் விழுந்த ஓட்டையின் காரணமாக சூரியனிடமிருந்து வெளிவரும் கதிர்கள் நேரடியாக சருமத்தை தாக்குகின்றன. இப்படியே சூரியக்கதிர்கள் சருமத்தைத் தாக்கினால், சரும செல்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி சருமம் கருமையாவதோடு, சரும புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். எனவே வெளியே செல்லும் முன் ஆண்கள் சரும செல்களுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் நல்ல SPF சன் ஸ்க்ரீன் லோசனை கை, கால்களுக்கு தடவிக் கொள்ள வேண்டும்.

  தொடரும்

Thursday, 28 July 2016

சில பெண்களுக்கு ஏற்படும் மீசைப் பிரச்சனைக்கான தீர்வு

சில
பிரச்னையை மிகவும் கவனமுடன் கையாள்வது நல்லது. முகம், கை, கால்களில் ஆண்களைப் போல பெண்களுக்கு முடி வளர்வது ஒரு மிகப் பெரிய தாழ்வு மனப்பான்மையை அவர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது. இதற்காக அடிக்கடி அழகு நிலையங்களுக்கு சென்று முடியை எடுத்து விடுவது தான் அனைத்தப் பெண்களும் செய்யும் மிகப் பெரிய தவறாகும். இதனால் முன்பை விட முடி இன்னும் வேகமாக வளர்ந்து விடும். அத்துடன் தொடர்ந்து அழகு நிலையங்களுக்கு சென்று முடியை எடுத்து வந்தால் அதனால் தோலுக்கும் ஆபத்து வரலாம். அதாவது தோல் தடித்து தனது அழகை முழுவதுமாக இழந்து விடும். பிறகு இதற்கு என்ன தான் உபாயம் வாருங்கள் பார்ப்போம். ‘ப்யூனிக்’ என்று ‘மாக்கல்’ போன்ற அமைப்பு கொண்ட ஒரு கல் உள்ளது. அது கொஞ்சம் சொர சொரப்பாக இருக்கும் அழகுக் கடைகளில் கிடைக்கும். அதன் எடை மாக்கல் போலக் கனமாக இருக்காது. அந்தக் கல்லினால் உடம்பைத் தேய்த்து வந்தால், முடி வளர்ச்சி தடைபட்டு, நாளடைவில் தோல் மிகவும் வழ, வழப்பாக மாறிவிடும். ஒரு வேளை இந்தக் கல் கிடைக்கவில்லை என்றால் சுரக் குடுக்கையை உலர வைத்து, அதனை உடம்பில் (சோப்புப் போட்டுத் தேய்த்துக் கொண்டு) தேய்த்தாலும் முடி வளர்வது குறையும். இது தவிர கொஞ்சம் வசதியான பெண்களாக இருந்தால் ஆவிக் குளியல் எடுக்கலாம். இந்த ஆவிக் குளியல் பல வழிகளில் நன்மைகளை செய்யக் கூடியது. ஆவிக் குளியல் சரும வியாதிகளைப் போக்கும் என்று அண்மைக் காலமாக நம்பப் படுகிறது. வெயில் காலங்களில் அதிக அளவில் வியர்வை வெளியாகும் சமயத்தில் அதில் இருக்கும் நீர் ஆவியாகி விடுகிறது. வியர்வையில் உள்ள உப்புக்கள், உடம்பின் மேல் பகுதி தோலின் மீது படிந்து விடுகிறது. அடிக்கடி தோலை சுத்தம் செய்யாவிடில் தோல் சொர சொரப்பாக ஆகி விடும். அதனால் தோலின் இயற்கைச் சுரப்பியான எண்ணெய்ப் பசை, மேல் தோலுக்கு வர முடியாதபடி துளைகள் நன்றாக அடைத்துக் கொண்டு விடும். இந்த நிலையில் அடிக்கடி ஆவிக் குளியல் செய்தால் அத்துளைகள் நன்றாக விரிந்து கொடுக்கும், தோலும் சொரசொரப்பாக இருக்காது. மெருகுடன் காணப்படும்.

Sunday, 24 July 2016

முகத்தில் கருமை போக்க

சூரியகாந்தி விதை
இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.
வெள்ளரிக்காய்
மாஸ்க் வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது. புத்துணர்ச்சியோடு இருக்கும். வெள்ளரிக்காயை தயிருடன் கலந்தும் மாஸ்க் போடலாம்.

மாம்பழத் தோல்

மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.
தக்காளி
பழ மாஸ்க் ஒரு சில பெண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும். அவர்களுக்கு தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப்பொருளாக விளங்குகிறது. நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு பூசவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும்

Saturday, 23 July 2016

முகத்தில் உள்ள கருமை இரண்டே நாட்களில் நீங்க சில அற்புத வழிகள்

பேக்கிங் சோடா பேஸ்ட் பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும். மென்மையான தோல் அமைப்பு கொண்டவர்கள் இதனை செய்ய வேண்டாம்.

வாழைப்பழம் மற்றும் பால் வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.

கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்

(தொடரும்)

Thursday, 21 July 2016

முகத்தை அழகாக்க சில யோசனைகள்:-

1. இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும். 2. உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். 3. ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் மென்மையாகும். 4. பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன், பால் சேர்த்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சென இருக்கும். 5. சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.

Wednesday, 20 July 2016

முகத்தை அழகு படுத்த பரமாரிக்க இதோ சில குறிப்புகள்

எண்சான் உடம்புக்கு சிரசே பிரதானம் என்று சொல்வார்கள். அந்த சிரசுக்கு முகம் தான் அடையாளம் என்பதை நாமும் அறிவோம் அல்லவா? காரணம் நமது உடலில் பார்த்தவுடன் முதலில் கண்களில் படுவது நமது முகம் தானே! அதனால் அந்த முகத்தை நாமே விரும்பும் படியாக நல்ல முறையில் பராமரிப்பது நமது கடமை அல்லவா? அதற்கென நமக்கு கை கொடுத்து உதவுவது தான் அழகுக் கலை ஆகும். இந்த அழகுக் கலையை பற்றி முழுவதுமாக அறிவதற்கு முன்னாள். முகம் குறித்த சில அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்வது நல்லது. முதலில் நமது முகம் வறண்ட முகமா அல்லது எண்ணெய் பசை உள்ள முகமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். காரணம் இதன் அடிப்படையில் தான் அழகு சாதனங்களை நாம் சரியாகத் தேர்ந்தெடுக்க முடியும். ஒருவேளை வறண்ட முகமாக இருந்தால் முகத்தில் ஆயுர்வேத க்ரீம்களை பூசலாம். எண்ணெய்ப் பசை உள்ள முகமாக இருந்தால் லோஷன் போடலாம். பொதுவாக அதிக வெயில் காலமாக இருந்தாலும் சரி அதிக பனிக் காலமாக இருந்தாலும் சரி முக சருமங்கள் பலருக்கு வறண்டு போகும். இதனைத் தவிர்க்க மாயிட்சரைசர் லோஷன்களைப் பயன்படுத்துவது நல்லது. அதுபோல தேவைப் பட்டால் முகப் பவுடர் ஐயும் உடன் பயன்படுத்தாலும். அவ்வாறு முகப் பவுடரை பயன்படுத்தினால் வெளிறிய நிறங்களில் உள்ளதை பயன்படுத்தலாம். அதே போல இமை முடிகள் சினிமா நடிகளைகளின் கண்களைப் போல கவர்ச்சியை ஊட்டும் படி இருக்க வேண்டும் என்று எண்ணினால் "மஸ்காரா" போடலாம். இந்த 'மஸ்காரா' இமை மயிர்களுக்கு ஒரு அழுத்தமான வண்ணமும் வடிவமும் தந்து கண்களுக்கு ஒரு கவர்ச்சியை அளிக்கிறது. அதே வகையில் கண்களை அழகாக எடுத்துக் காட்ட 'ஐ- லைனர்' உதவும். இந்த 'ஐ -லைனர்கள்' கண்களைச் சற்று பெரியதாகவும், அழகிய வடிவு உள்ளதாகவும் காட்ட உதவும். இது திரவமாகவும், பென்சில் போலவும், சிறு கட்டி வடிவிலும் கூடக் கிடைக்கிறது. பெண்களின் முகமானால் உதடுகள் கூடுதல் அழகுடன் இருப்பது ஒரு கவர்ச்சி தான் அதற்கு வெளிர் நிற உதட்டுச் சாயத்தைப் பயன்படுத்தவும். காரணம் அந்த வகை சாயங்கள் அனைத்து உடைகளுக்கும் பொருத்தமாக இருக்கும். பகலில் இப்படியாக பல ஒப்பனைகளை செய்து கொண்டாலும் இரவு நேரத்தில் முகத்தை கழுவிச் சுத்தமாக மேக்கப்பைப் போக்க வேண்டும். அது மிகவும் அவசியம். இல்லையேல் அது பலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். வெயில் காலங்களில் அதிக சூரிய வெயிலில் சென்றாலும், முகத்தில் உள்ள நீர் வற்றாமல், சருமத்தைக் காப்பாற்ற உதவுவது "மாயிட்சரைசர்" தான். வெயில் காலங்களில் இதனை அவசியம் பயன்படுத்துவது நல்லது. இது இன்றைய கால கட்டத்தில் லோஷன் வடிவிலும் கிடைக்கும். இது அளவுக்கு அதிகமான வியர்வையை கட்டுப்படுத்தி உப்பு உடலில் அதிகம் படிவதைத் தடுக்கிறது. அத்துடன் வியர்வை நாற்றம் வராமலும் தடுக்கிறது. இது தவிர கன்னங்கள் அழகாக இருக்க "ரூஜ்" யை பயன்படுத்தலாம். இது கன்னத்தின் எலும்புப் பகுதியில் தடவும் ஒரு வித வண்ணம் ஆகும். முதலில் க்ரீம் வடிவில் உள்ள ரூஜை பவுண்டேஷன் போட்ட பிறகு இதனைப் பயன்படுத்த வேண்டும் [பின்குறிப்பு: பவுண்டேஷன் என்ன நிறத்தில் போட்டுக் கொள்கிறோமோ, அதே நிறத்தில் முகப்பவுடரையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். வெளிறிய நிறங்களில் முகப்பவுடரை உபயோகிப்பது எல்லாவிதமான சருமத்தினருக்கும் ஏற்றதாக அமையும். இதே வகையில் பவுடர் ரூஜும் கிடைக்கிறது. அந்தப் பவுடர் ரூஜை முகப் பவுடர் போட்ட பிறகு பயன்படுத்தலாம். அதிலும் வறண்ட சருமத்திற்கு க்ரீம் ரூஜும், அதிக எண்ணெய்ப் பசை உள்ள சருமத்துக்கு பவுடர் ரூஜும் போடுவது நல்லது. இவை எல்லாவற்றையும் விட ஒப்பனை என்று வந்து விட்டால் அதனை ஒரு சில நிமிடங்களில் செய்து முடித்து விட முடியாது. எனவே, பொறுமை மிக,மிக அவசியம். சிலருக்கு சிகப்பாக வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால், உண்மையில் எப்படிப் பட்ட க்ரீம்களை உபயோகித்தாலும் நாம் சிவப்பாக மாறுவது என்பது அனுபவத்தில் முடியாத காரியம். காரணம், நமது தோலில் உள்ள நிற முடிச்சுகள் தான் நமக்குத் தோல் நிறத்தை அளிக்கிறது. மேலும், இந்த விஷயத்தில் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். அத்துடன் தேவை இல்லாத ஆயின்மென்ட்டுகளையும் போட்டுக் கொண்டு சரும வியாதிகளை வர வளைத்துக் கொள்ள வேண்டாம். பெரும்பாலான விளம்பரங்கள் அனைத்தும் பொய்யும், பித்தலாட்டமும் நிறைந்தவை. வேண்டும் என்றால் இருக்கும் நிறத்திற்கு மெருகு ஊட்டலாம். அதற்கு தினமும் லேசான பூசு மஞ்சள் பொடியைத் தடவி  வரவும்