Saturday, 30 July 2016

ஆண்களே! - பெண்களை வசிகரிக்கும் அழகுக் குறிப்புகள் உங்களுக்காக பகுதி 2

நல்ல மாய்ஸ்சுரைசர் 

தினமும் இரண்டு முறை சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டியது அவசியம். இதனால் சருமம் வறட்சியடைவது தடுக்கப்பட்டு, சருமத்தில் வெடிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும். அதில் பகலில் நீர்மமான மாய்ஸ்சுரைசரையும், இரவில் அடர்த்தியான மாய்ஸ்சுரைசரையும் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் போதிய நீர்ச்சத்துடன் இருக்கும். 


பழங்கள் மற்றும் காய்கறிகள் அடிக்கடி டீ, காபி குடிக்கும் பழக்கத்தைத் தவிர்த்து, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உண்ணும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். இதனால் சருமத்திற்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, சரும செல்கள் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். எனவே அழகை அதிகரிக்க விரும்பினால், ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பௌல் சாலட் சாப்பிடுங்கள். 

உப்பை குறைத்துக் கொள்ளுங்கள்


 உணவின் சுவையை அதிகரிக்க உப்பு, சர்க்கரை போன்றவை அவசியம் தான். ஆனால் அதை அளவுக்கு அதிகமாக சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள். குறிப்பாக உப்பை தவிர்த்திடுங்கள். ஏனெனில் உப்பு முகத்தை வீங்கச் செய்யும். எனவே உணவில் அளவாக உப்பை சேர்த்து சாப்பிடுங்கள். 

நல்ல தூக்கம் முக்கியமாக இரவில் 7-8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இந்நேரத்தில் தான் பாதிக்கப்பட்ட சரும செல்கள் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும். ஆனால் அந்த ஓய்வு சரியான அளவில் கிடைக்காவிட்டால், முகம் பொலிவிழந்து தான் காட்சியளிக்கும்.

No comments:

Post a Comment