Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Sunday, 7 August 2016

நன்பர்கள் தின வாழ்த்துகள்

மனைவி மட்டும் அல்ல…
நண்பர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான்.

என் சந்தோசத்தை தன் சந்தோசமாக
நினைத்து மகிழும் என் நலம் விரும்பிகளுக்கும்,

துக்கங்களிலும், தோல்விகளிலும் என்னை துவண்டுவிடாமல்
தோள்கொடுத்து உற்சாகப்படுத்தும் சக்திமான்களுக்கும்,

தவறுகளை கண்டும் காணாமல் போய்விடாது
அதை சுட்டிக்காட்டி என்னை நெறிப்படுத்தும் புத்திமான்களுக்கும்,

பேசத்துடித்தும் பேசமுடியா தூரத்தில்
காலத்தால் கடத்தப்பட்டபட்ட நல்லுள்ளங்களுக்கும்,

வேறுவழியில்லாமல் என்னிடம் பேசியே ஆகவேண்டிய
நிர்பந்தத்தில் கிடத்தப்பட்ட பாக்கியவான்களுக்கும்,

நட்பின் போர்வையில் இன்னும் தன் சுயரூபத்தை
வெளிக்காட்ட வாய்ப்புகிடைக்காத புண்ணியவான்களுக்கும்,

என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

Saturday, 6 August 2016

நன்பர்கள் தின வாழ்த்து

என் சகோதரன் என் சட்டையை
பயன்படுத்தினால் கூட
எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ
எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது.

காதலியோடு பேசுகையில் கூட
முகமூடி அணிந்து பேசுகிறேன்.
ஆனால் என் நட்பின் முன்னாலோ
எவ்வித முகமூடியுமின்றி
நான் நானே இயல்பாய் இருக்கிறேன்.

கடற்கரையில் ஒன்றாய் குளித்த நாட்கள்..
பேருந்தில் செய்த குறும்புகள்...
மொட்டை மாடி அரட்டைகள்..
பள்ளி மைதான விளையாட்டுகள்...
என அத்தனை நினைவுகளும்
இன்னமும் பசுமையாய் இதயத்தில்....

நண்பனின் கை அருகில் இருக்கையில்
நம்பிக்கையும் கூடவே...

வீட்டில் பெற்றோர் இல்லா நேரங்கள் சொர்க்கம்..
நண்பர்கள் மட்டுமே சுற்றி இருந்து,
ஒருவர் மீது ஒருவர் படுத்து,
அடித்து விளையாடி,
கண்ட கண்ட சேனல் மாற்றி,
பக்கத்து வீட்டில் திட்டு வாங்கி,
சமைக்க தெரியாமல் சமைத்து,
காஃபி என்ற பெயரில் ஏதோ அருந்தி,
என சந்தோஷங்களோடே
வாழ்ந்த காலங்கள் வரம்..

இன்று வித விதமான பைக்கில்
பயணம் செய்தாலும் கிடைப்பதில்லை
நண்பனின் பின்னால் அமர்ந்து
சைக்கிளில் டபுள்ஸ் போன சுகம்.. 

ஒன்றாய் அமர்ந்து படிக்கிறோம்
என்ற பெயரில் பாடத்தை தவிர
அனைத்தை பற்றியும்
பேசிக்கொண்டு இருப்போம்.. 

அப்பாவிற்கு மட்டுமே
கடிதம் வரும் காலங்களில்
எனக்கும் கடிதம் வந்திருக்கிறது என
பெருமைப்பட்ட நேரங்கள்..
ஆம் நண்பனிடமிருந்து வந்த
ஒற்றை கிரீட்டிங் கொடுத்த மகிழ்ச்சி..

பள்ளி நாட்களில் உணவு கொண்டு வராத
சமயங்களில் நண்பர்களிடமிருந்து
பகிர்ந்து உணவு உண்ட சமயங்கள்
மீண்டும் எப்போது கிடைக்கும்?

நண்பர்களிடம் சண்டை போட்டு
பேசாமல் இருந்த காலங்களை நினைத்து
பார்க்கையில் இப்போது சிரிப்பாய் இருக்கிறது.

பள்ளி முடிந்ததும்
சீருடை தொலைக்கிறோம்.
வளரத்தொடங்கியதும்
நட்பை தொலைக்கிறோம்.

எத்தனை எத்தனை சந்தோஷமான
தருணங்கள் நட்பில்..
அத்தனையும் தொலைக்கிறோம்
இயந்திரத்தனமான வாழ்க்கையின் இடையே...

வாழ்க்கை வேகத்தில் நண்பர்கள்
எங்கெங்கோ சிதறி போகிறோம். 
என்றேனும் ஒரு நாள்
நாம் அனைவரும் ஒன்றாய் எடுத்து கொண்ட
புகைப்படத்தை பார்க்க நேர்கையில்
விழியின் ஓரமாய் கசியும் கண்ணீருக்கு
என்ன பதில் சொல்ல போகிறோம்?

கடவுள்
சங்கடத்தை அனுபவிக்க
காதலை அனுப்புகிறார்...
சந்தோஷத்தை அனுபவிக்க
நட்பை அனுப்புகிறார்...

என் இதயத்தின் அத்தனை
அறைகளிலும் நிறைந்து இருக்கும்
என் நண்பர்கள் அனைவருக்கும்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

Thursday, 28 July 2016

ஒருவர் மட்டும் பேசட்டும்

நீ பேசு அல்லது
உன் அழகு பேசட்டும்

இருவரும் பேசினால் நான் எப்படிக் கேட்பது

ஒருவர் மட்டும் பேசட்டும்

நீ பேசு அல்லது
உன் அழகு பேசட்டும்

இருவரும் பேசினால் நான் எப்படிக் கேட்பது

Tuesday, 26 July 2016

அப்துல்கலாம்

பாரத தாயின் தவப்புதல்வன்;
ஏழையாய் பிறந்தவன்;
கலத்தில் சிறந்தவன்;
விண்கலத்தின் நாயகன்;
குடியரசை ஆண்டவன்;
எளிமையாய் வாழ்ந்தவன்;
தமிழுக்கு பெருமை சேர்த்தவன் - தமிழனாய்
தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவன்;
இளைங்கர்களின் முன்னோடியாய்,
இதயத்தில் வாழ்ந்தவன்;
மாற்றம் தந்தவனுக்கு,
ஏனிந்த தாடுமாற்றமோ???
அக்னி சிறகுகளை தந்தவன்,
தன் சிறகுகளை அடக்கிகொண்டானே!
கனவு காண சொன்னவன்,
நிரந்தரமாக உறங்குகிறானே!
சூரியனை மறைக்க முடியுமா?
கடலலைகளை நிறுத்தமுடியுமா?
மண்ணின் மைந்தன் மறைந்தாலும்,
நிரந்தரமாக உறங்கினாலும்,
ஒளி வீசிக்கொண்டே இருப்பான் - எங்கள்
நினைவலையில் தவழ்ந்துகொண்டே இருப்பான்;
அயராது உழைத்தவனுக்கு,
ஓய்வை மறந்தவனுக்கு,
இந்த ஓய்வு தேவைதான்;
உறங்கட்டும் விட்டு விடுங்கள்;
காலம் கலாமை மறைத்தாலும்,
ஞாலம் கலாமை மறவாது!!!

.
(நீ அமைத்த பாதையில் நாங்கள் பயணிப்போம்;
வல்லரசு இந்தியாவை நோக்கி!!!)

Sunday, 24 July 2016

காதலி ஓசை

ஒரு சாளரம் வழியே புல்லாங்குழல் இசை கேட்பது போல என்னை தீண்டி என் உணர்வுகளை தூண்டும் உன் குரல்.... சட்டென்று இடைமறித்தலில் சர சர வென கோபத்தில் கணீர் என ஒலித்து எந்தன் காதை பதம் பார்க்கும் உன் குரல்... ஓடையின் சலசலப்பாய் சில துளி சிரிப்புகளோடு தொடரும் எந்தன் சிந்தையை கவர்ந்தபடி சில நாட்களில் உன் குரல்..... கொஞ்சம் குழைவாய் லயமாய் கேட்கும் நீ சிணுங்கி என்னை சிறை செய்யும் நாட்களில் இன்பச்சிறையாய் உன் குரல்... அதட்டி எந்தன் அன்பை அழவைத்து பார்த்துவிட்டு அழுகை துடைப்பதென அவசரமாய் அரவணைக்கும் உன் குரல்... நொடிகளை யுகமாக்கி மணித்துளிகளை நகர்த்தி மனம் முழுதும் உன்னை இருத்தி காத்திருக்கிறேன் உன் குரல் கேட்டிடவே..

Wednesday, 20 July 2016

மரம்

என் நண்பர்களை கொடூரமாக வெட்டி கொன்றாய்.. இப்பொழுது என்னை கொள்ள வந்திருக்கிறாய்.. எங்களை கொள்வதானால் உனக்கு லாபம் என்று நினைக்கிறாய்.. அது தான் இல்லை.. உனது இனம் தான் கொஞ்சம் கொஞ்சமாக அழியும்.. அது சரி.. நான் சொல்வதை யார் கேக்க போறா.. நானே ஒரு தனி மரம்..

Tuesday, 19 July 2016

நட்பை பற்றி 4 வரிகள்

1. ஒரு நல்ல நட்பு கரும்பை போன்றது.. நாம் அதை அடித்தாலும், ஒடித்தாலும், கடித்தாலும், பிழிந்தாலும் நமக்கு இனிப்பை மட்டுமே தரும்.

2. விரும்பிய ஒருவரை மட்டும் சொந்தமாக்கி கொள்வது காதல்..! விரும்பிய அனைவரையும் சொந்தமாக்கி கொள்வது நட்பு..!!

3. என்னை எதற்காகவும் விட்டுக்கொடுக்காத நீ, என்னோடு இருக்கையில்.. என் மனம் ஒருவித கர்வம் கொள்கிறது..!!

4. பூக்கள் என்றால் வாசம்…! காதல் என்றால் நேசம்…! அம்மா என்றால் பாசம்..! ஆனால்… நட்பு என்றால் சுவாசம்…!!!

காதல் பறவைகள்

கடைக்கண்ணால் பார்த்தாலே எழுத்துக்களெல்லாம் உன் கண்கள் வழியே குதித்தோடி உன் மனதிற்குள் பதிந்துகொள்வதால் உனக்கு படிப்பது எளிது உன் மனதில் பதிந்ததெல்லாம் அடம்பிடித்துக்கொண்டு வெளியில் வர மறுப்பதால் உனக்கு பரிட்சை எழுதுவதுதான் கடினம்

Sunday, 17 July 2016

காதல்

உன்னை கண்டு நாள் முதல்
நான்   கவிஞன் ஆகினேன் !
நீ கவிதை ஆகிறாய் !

நீ தோழிகளோடு பல்லாங்குழி
ஆடுகையில் – ௨ன்
ஒவ்வொ௫ காய் நகர்த்தலிலும்
புளியாங் கொட்டையும்
புதுக் கவிதையாகிறது !
௭ந்த ஒ௫ காரணமும்
தேவை இல்லை
நீ ௭ன் மேல்
கோபித்தி௫ப்பதற்கு ! – ௨ன்
ஒவ்வொ௫ அசைவும்
காரணம் தான்
நான் ௨ன்னை
காதலித்து இ௫ப்பதற்கு !

நீ நகர்கிற திசையில்
௭ந்தன் பாதை !

அதிகம் தேவை இல்லை – நீ
கலைந்த ௨ன் நெற்றி
முடிதனை கோதினால் போதும் ,
௭ன் தவம் கலையும் !

நிசுப்தமான இரவினில்
யா௫மற்ற வீதியில்
௭ன்னைப் பின்தொடுர்ந்தாள்
அவள் – வெண்ணிலவாக !

காற்றோடு கொடியசைய,
கொடியோடு பூவசைய ,
பூவோடு வண்டுசைய !
அவ் வண்டுண்டு
தேன் கொண்டு – ௭ன்
தொண்டை நினைத்தாலும்
௨ன் முத்தத்திற்க்
ஈடேறி நிற்காது ௭ன்பேன் !
௭ப்போதும் ௨ன்
முத்தத்தை ௨ண்பேன் !

௭த்தனை வரிகள் தான்உன்னைப் பற்றியே ௭ழுதுவது க்ஷ
௭ன்னைப் பற்றிய
ஒ௫ வரி கவிதை – இதோ
” ௨ன் காதலன் ! ” – போதாதா இது

Saturday, 16 July 2016

நட்பு

1. சண்னடயிட்டு நம்மை விட்டு விலகிய பின்னும் நாம் சொன்ன ரகசியம் காக்கப்படுமாயின், நீ இழந்தது சிறந்த நண்பனை

2. நட்பு.. ஒரு தோழனிடம் உணரும் தாயின் அன்பு.. ஒரு தோழிக்கு விலை மதிக்கக் முடியாது பொக்கிஷம்

3. சொல்லும் போது, அதை அவன் நம்பிவிடும் முட்டாள் என்று மட்டும் நினைக்காதே.. உன்னை காயப்படுத்த கூடாது என்பதற்காக தனது உணர்சிகளை மறைத்துக் கொள்கிறான்..!!

4. என்னை விட நல்ல நண்பனை நீ கண்டுபிடித்தால் என்னைக் கடந்து செல்.. நான் உன்னை தடுக்கமாட்டேன்.. ஆனால், அவன் உன்னை விட்டு விலகிச் சென்றால் பின்னால் திரும்பி பார்.. அங்கே உனக்காக நான் இருப்பேன்.. அப்போதும் நல்ல நண்பனாய்..!

5. பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை.. ஆனால் இறக்கும் போது, கண்டிப்பாக கொண்டு செல்வேன்.. உங்கள் நினைவுகளை...!!

Wednesday, 13 July 2016

இப்போ என்ன சொல்ல

பேனாவில் மையில்லை
எழுதவும் தாளில்லை
கவிதை எழுத முடியவில்லை
என்றக் காரணம் சொல்ல முடிந்தது
செல்பேசியில்
கவிதை எழுதாது வரை!!!!!!

Monday, 11 July 2016

அப்துல்கலாம் நினைவுகள்

ஆயிரம் நட்சத்திரம் வானத்தில்
ஜொலித்தாலும் அதில் நிலா என்பது
தனியாகத்தான் தெரியும் அதுபோல இந்திய நாட்டில் ஆயிரம் விஞ்ஞானிகள்
இருந்தாலும் அதில் நிலா போல் ஜொலித்தவர் அப்துல்கலாம் தான்
தாயின் உயிர் குழந்தையை விட்டு பிரிந்தாலும் அந்த
தாயின் ஆத்மா
குழந்தையை சுற்றி வரும்
அதுபோல
கலாம் உயிர் மறைந்தாலும் அவரின் நினையுகள் இம்மண்ணை விட்டு மறையாது

Sunday, 10 July 2016

வாழ்கை

கருவாகி உருவாகி
தருவாகி எருவாகி
மறையும் மனிதனே
இடைப்பட்டக் காலமே
வாழ்க்கைப் பயணம்
மறவாதே ஒருபோதும் !
அறிந்தும் அதனை
ஆடுகின்ற மானுடா
அடக்கமாய் நடந்திட !
அளவிலா ஆசையுடன்
பணமும் பதவியென
பேராசையை கைவிடு !
சாதிசமய வெறியென
அரிதாரம் அணிவதை
உடனடியாய் களைந்திடு !
அகமொன்று புறமொன்று
மாறுபட்ட செயல்களை
தயங்காமல் தவிர்த்திடு !
பகுத்தறிவை முன்னிறுத்தி
பயனுறவே வாழ்ந்திட்டு
பலன்களை அடைந்திடு !
முன்னோரை நினைத்திடு
முதியோரை வணங்கிடு
முன்மாதிரியாக வாழ்ந்திடு !

தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!