Wednesday, 20 July 2016

முகத்தை அழகு படுத்த பரமாரிக்க இதோ சில குறிப்புகள்

எண்சான் உடம்புக்கு சிரசே பிரதானம் என்று சொல்வார்கள். அந்த சிரசுக்கு முகம் தான் அடையாளம் என்பதை நாமும் அறிவோம் அல்லவா? காரணம் நமது உடலில் பார்த்தவுடன் முதலில் கண்களில் படுவது நமது முகம் தானே! அதனால் அந்த முகத்தை நாமே விரும்பும் படியாக நல்ல முறையில் பராமரிப்பது நமது கடமை அல்லவா? அதற்கென நமக்கு கை கொடுத்து உதவுவது தான் அழகுக் கலை ஆகும். இந்த அழகுக் கலையை பற்றி முழுவதுமாக அறிவதற்கு முன்னாள். முகம் குறித்த சில அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்வது நல்லது. முதலில் நமது முகம் வறண்ட முகமா அல்லது எண்ணெய் பசை உள்ள முகமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். காரணம் இதன் அடிப்படையில் தான் அழகு சாதனங்களை நாம் சரியாகத் தேர்ந்தெடுக்க முடியும். ஒருவேளை வறண்ட முகமாக இருந்தால் முகத்தில் ஆயுர்வேத க்ரீம்களை பூசலாம். எண்ணெய்ப் பசை உள்ள முகமாக இருந்தால் லோஷன் போடலாம். பொதுவாக அதிக வெயில் காலமாக இருந்தாலும் சரி அதிக பனிக் காலமாக இருந்தாலும் சரி முக சருமங்கள் பலருக்கு வறண்டு போகும். இதனைத் தவிர்க்க மாயிட்சரைசர் லோஷன்களைப் பயன்படுத்துவது நல்லது. அதுபோல தேவைப் பட்டால் முகப் பவுடர் ஐயும் உடன் பயன்படுத்தாலும். அவ்வாறு முகப் பவுடரை பயன்படுத்தினால் வெளிறிய நிறங்களில் உள்ளதை பயன்படுத்தலாம். அதே போல இமை முடிகள் சினிமா நடிகளைகளின் கண்களைப் போல கவர்ச்சியை ஊட்டும் படி இருக்க வேண்டும் என்று எண்ணினால் "மஸ்காரா" போடலாம். இந்த 'மஸ்காரா' இமை மயிர்களுக்கு ஒரு அழுத்தமான வண்ணமும் வடிவமும் தந்து கண்களுக்கு ஒரு கவர்ச்சியை அளிக்கிறது. அதே வகையில் கண்களை அழகாக எடுத்துக் காட்ட 'ஐ- லைனர்' உதவும். இந்த 'ஐ -லைனர்கள்' கண்களைச் சற்று பெரியதாகவும், அழகிய வடிவு உள்ளதாகவும் காட்ட உதவும். இது திரவமாகவும், பென்சில் போலவும், சிறு கட்டி வடிவிலும் கூடக் கிடைக்கிறது. பெண்களின் முகமானால் உதடுகள் கூடுதல் அழகுடன் இருப்பது ஒரு கவர்ச்சி தான் அதற்கு வெளிர் நிற உதட்டுச் சாயத்தைப் பயன்படுத்தவும். காரணம் அந்த வகை சாயங்கள் அனைத்து உடைகளுக்கும் பொருத்தமாக இருக்கும். பகலில் இப்படியாக பல ஒப்பனைகளை செய்து கொண்டாலும் இரவு நேரத்தில் முகத்தை கழுவிச் சுத்தமாக மேக்கப்பைப் போக்க வேண்டும். அது மிகவும் அவசியம். இல்லையேல் அது பலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். வெயில் காலங்களில் அதிக சூரிய வெயிலில் சென்றாலும், முகத்தில் உள்ள நீர் வற்றாமல், சருமத்தைக் காப்பாற்ற உதவுவது "மாயிட்சரைசர்" தான். வெயில் காலங்களில் இதனை அவசியம் பயன்படுத்துவது நல்லது. இது இன்றைய கால கட்டத்தில் லோஷன் வடிவிலும் கிடைக்கும். இது அளவுக்கு அதிகமான வியர்வையை கட்டுப்படுத்தி உப்பு உடலில் அதிகம் படிவதைத் தடுக்கிறது. அத்துடன் வியர்வை நாற்றம் வராமலும் தடுக்கிறது. இது தவிர கன்னங்கள் அழகாக இருக்க "ரூஜ்" யை பயன்படுத்தலாம். இது கன்னத்தின் எலும்புப் பகுதியில் தடவும் ஒரு வித வண்ணம் ஆகும். முதலில் க்ரீம் வடிவில் உள்ள ரூஜை பவுண்டேஷன் போட்ட பிறகு இதனைப் பயன்படுத்த வேண்டும் [பின்குறிப்பு: பவுண்டேஷன் என்ன நிறத்தில் போட்டுக் கொள்கிறோமோ, அதே நிறத்தில் முகப்பவுடரையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். வெளிறிய நிறங்களில் முகப்பவுடரை உபயோகிப்பது எல்லாவிதமான சருமத்தினருக்கும் ஏற்றதாக அமையும். இதே வகையில் பவுடர் ரூஜும் கிடைக்கிறது. அந்தப் பவுடர் ரூஜை முகப் பவுடர் போட்ட பிறகு பயன்படுத்தலாம். அதிலும் வறண்ட சருமத்திற்கு க்ரீம் ரூஜும், அதிக எண்ணெய்ப் பசை உள்ள சருமத்துக்கு பவுடர் ரூஜும் போடுவது நல்லது. இவை எல்லாவற்றையும் விட ஒப்பனை என்று வந்து விட்டால் அதனை ஒரு சில நிமிடங்களில் செய்து முடித்து விட முடியாது. எனவே, பொறுமை மிக,மிக அவசியம். சிலருக்கு சிகப்பாக வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால், உண்மையில் எப்படிப் பட்ட க்ரீம்களை உபயோகித்தாலும் நாம் சிவப்பாக மாறுவது என்பது அனுபவத்தில் முடியாத காரியம். காரணம், நமது தோலில் உள்ள நிற முடிச்சுகள் தான் நமக்குத் தோல் நிறத்தை அளிக்கிறது. மேலும், இந்த விஷயத்தில் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். அத்துடன் தேவை இல்லாத ஆயின்மென்ட்டுகளையும் போட்டுக் கொண்டு சரும வியாதிகளை வர வளைத்துக் கொள்ள வேண்டாம். பெரும்பாலான விளம்பரங்கள் அனைத்தும் பொய்யும், பித்தலாட்டமும் நிறைந்தவை. வேண்டும் என்றால் இருக்கும் நிறத்திற்கு மெருகு ஊட்டலாம். அதற்கு தினமும் லேசான பூசு மஞ்சள் பொடியைத் தடவி  வரவும்

No comments:

Post a Comment