கருவாகி உருவாகி
தருவாகி எருவாகி
மறையும் மனிதனே
இடைப்பட்டக் காலமே
வாழ்க்கைப் பயணம்
மறவாதே ஒருபோதும் !
அறிந்தும் அதனை
ஆடுகின்ற மானுடா
அடக்கமாய் நடந்திட !
அளவிலா ஆசையுடன்
பணமும் பதவியென
பேராசையை கைவிடு !
சாதிசமய வெறியென
அரிதாரம் அணிவதை
உடனடியாய் களைந்திடு !
அகமொன்று புறமொன்று
மாறுபட்ட செயல்களை
தயங்காமல் தவிர்த்திடு !
பகுத்தறிவை முன்னிறுத்தி
பயனுறவே வாழ்ந்திட்டு
பலன்களை அடைந்திடு !
முன்னோரை நினைத்திடு
முதியோரை வணங்கிடு
முன்மாதிரியாக வாழ்ந்திடு !
Sunday, 10 July 2016
வாழ்கை
Labels:
கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment