பொதுவாக இந்திய ஆண்கள் தங்கள் சருமத்தின் மீது அதிக அக்கறை காட்டிக் கொள்ளமாட்டார்கள். இதனால் தான் அவர்களுக்கு சருமத்தில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக முகப்பருக்கள், பொலிவிழந்த முகம், சருமத்தில் சுருக்கம் போன்றவை இந்திய ஆண்களின் அழகையும், இளமைத் தோற்றத்தையும் பாதிக்கின்றன. அக்காலத்தில் ஆண்கள் அழகின் மீது அக்கறை காட்டாமல் இருந்ததற்கு காரணம், அவர்களது மாசற்ற சுற்றுச்சூழல் தான். ஆனால் இப்போதோ மாசுக்கள் இல்லாத இடங்களே இல்லை. இதனால் முதலில் பாதிக்கப்படுவது நம் சருமம் தான். ஆகவே இக்காலத்தில் ஆண்கள் தங்கள் சருமத்தின் மீது அக்கறையின்றி இருந்தால், விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெற வேண்டியது தான். இங்கு ஆண்களின் அழகை அதிகரிக்க தினமும் பின்பற்ற வேண்டியது என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் சரும பிரச்சனைகள் வருவதைத் தவிர்க்கலாம். அப்பட்டியல் பின்வருமாறு
தண்ணீர்
சருமத்தின் சிறந்த நண்பன் தண்ணீர் தான். சரும அழகை அதிகரிக்க வேண்டுமானால் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். நேச்சுரல் ஸ்கரப் காற்று மாசுபாட்டினால் சரும செல்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றன. இதனால் முகம் பொலிவிழந்து அசிங்கமாக இருக்கிறது. ஆகவே வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், கெமிக்கல் பொருட்களைக் கொண்டு சருமத்தை பராமரிப்பதைத் தவிர்த்து, இயற்கைப் பொருட்களான கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி தேய்த்து கழுவ, முகத்தில் உள்ள அழுக்குகள் முழுவதும் நீங்குவதோடு, முகத்தில் உள்ள தழும்புகளும் மறைந்து, முகம் அழகாக காட்சியளிக்கும்
. சன் ஸ்க்ரீன்
ஓசோன் மண்டலத்தில் விழுந்த ஓட்டையின் காரணமாக சூரியனிடமிருந்து வெளிவரும் கதிர்கள் நேரடியாக சருமத்தை தாக்குகின்றன. இப்படியே சூரியக்கதிர்கள் சருமத்தைத் தாக்கினால், சரும செல்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி சருமம் கருமையாவதோடு, சரும புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். எனவே வெளியே செல்லும் முன் ஆண்கள் சரும செல்களுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் நல்ல SPF சன் ஸ்க்ரீன் லோசனை கை, கால்களுக்கு தடவிக் கொள்ள வேண்டும்.
தொடரும்
No comments:
Post a Comment