Monday, 1 August 2016

ஒலிம்பிக் - ஒரு இந்தியக் கனவு

வறுமையின் கோரப்பிடியில் இருக்கும் ஆப்ரிக்க நாடுகளான கென்யா,உகாண்டா,எத்தியோப்பியா,மொராக்கோ போன்ற நாடுகளின் வீரர்கள் தான் நீண்ட தூர தடகள போட்டியின் முடிசூடா மன்னர்கள்.  பெரும்பாலன மக்கள் மூன்று வேலை உணவுக்கே கஷ்டப்படும் ஆப்ரிக்க நாடுகளால் எப்படி ஒலிம்பிக் தடகள களத்தில் பதக்கங்களை அள்ள முடிகிறது.

ஆப்ரிக்கர்களின் தடகளதிறனும், சீனர்களின் ஜிம்னாஸ்டிக் திறனும் இந்தியர்களுக்கு இல்லையா?? இயற்கையான உடல், மனத்திறன்களில் எந்த நாட்டவருக்கும் குறைந்தவர்கள் அல்ல இந்திய உழைப்பாளி மக்கள். ஆனால், பதக்க பட்டியலில் இந்த தேசங்களின் அருகே கூட இந்தியா வரமுடியாமல் பட்டியலை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
இந்திய கிராமங்களிலும், சேரிகளிலும் பல உலக விளையாட்டு சாம்பியன்கள் முகவரியற்று இருக்கின்றனர். அவர்களை அடையாளம் காணும் அளவுக்கு செயல்நோக்கம் நிறைந்த விளையாட்டு துறை நம்மிடையே இல்லை.
  குறைந்தது பல கஷ்டங்களுக்கிடையில் முன்னுக்கு வருபவர்களை சாதியின் பெயரால் புறக்கணிக்காமல் இருந்தால் ஒரு தடகள சாம்பியனாவது இந்தியாவுக்கு கிடைததிருப்பான்.  பணம், அந்தஸ்து, சிபாரிசு போன்றவைகள் விளையாடமல் இருந்தால் ஒலிம்பிக் களத்தில்சிறுத்தையாய் விளையாடும் வீரர்கள் நமக்கு கிடைத்திருப்பார்கள்.
  மிக உயரத்தில் இருந்து கிணற்றுக்குள் டைவ் அடித்து குதிக்கும் இந்திய கிராமத்து இளைஞனை பயிற்சி அளித்து ஒலிம்பிக்கிற்கு அனுப்பினால் டைவிங் பிரிவில் தங்கம் நமக்குதானே..
உண்டிவில்லை வைத்து தூரத்து ஓணானை அடிக்கும் இந்திய கிராமத்து இளைஞனை பயிற்சி அளித்து அனுப்பினால் துப்பாக்கி சுடுதலில் தங்கம் அள்ளிவந்து விடமாட்டானா...
காட்டிலும் மேட்டிலும் பாறைகளிலும் காலில் செருப்பு கூட இல்லாமல் ஓடிவிளையாடும் இந்திய கிராமத்து இளைஞன் முறையான பயிற்சியுடன் ஒலிம்பிக்கிற்கு சென்றால் உசைன் போல்டுக்கு சவால் விட மாட்டானா....
சுலபமாக வேலி தாண்டி மாம்பழங்களை பரித்துவரும் கிராமத்து சுட்டிபையனை உயரம் தாண்டுதலுக்கு பயிற்சி அளித்தால் உலக சாம்பியன்களை மிரளவைக்க மாட்டானா...
ஆனால், வீரர்களின் குறுக்கே நிற்பது சாதி, பணம், அரசியல் குறுக்கீடு ஆகிய வேலிகளே... வரும் தலைமுறை அதை தகர்க்க தயாராகட்டும்...
   - சரண்

No comments:

Post a Comment