Friday, 22 July 2016

இக்காலதிற் எற்ற தத்துவம்

1.முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள், அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்

2. என் இறப்பு எவருக்கும் வருத்தம் அளிப்பதாக இல்லாமல் போனாலும், ஒருவர் கூட நிம்மதி பெருமூச்சு விடுவதாக அமைந்துவிடக் கூடாது!!!

3.சந்தோசமாக உள்ளவனிடம் மட்டுமே இவ்வுலகம் நலம்விசாரிக்கும்! கஷ்டத்திலே இருப்பவனோட தொலைபேசிஎண்கள் கண்டிப்பாகபழைய செல்போனோட தொலைஞ்சுபோயிருக்கும்

4. பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இல்லை

5. காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம். காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்.

6. அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது! அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை!!

No comments:

Post a Comment