Saturday, 16 July 2016

கும்பகோணம் பள்ளிக்கூடத் தீ விபத்து இன்று

   கும்பகோணம் பள்ளிக்கூடத் தீ விபத்து இன்று 2004, சூலை 16 ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தைப் பற்றியது. இவ்விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். இறந்த குழந்தைகள் அனைவரும் 7 வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்டவர்களாவர். 18 நபர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது. இத்தீவிபத்து மதிய உணவு தயாரிக்கும்போது ஏற்பட்டது. இவ்விபத்திற்கு பின் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளும் கட்டமைப்பு விதிகளும் கொண்டுவரப்பட்டன.
      இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா . 1 லட்சம் கருணைத் தொகையாகவும் கடுமையாகக் காயமுற்றோருக்கு தலா 25 ஆயிரமும் லேசாகக் காயமுற்றவர்களுக்கு தலா
. 10 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்பட்டன. இவ் விபத்து குறித்து விசாரித்த நீதிபதி சம்பத் கமிஷன் , இவ் விபத்துக்கு முற்றிலும் அரசு அதிகாரிகள்தான் பொறுப்பு என்று தெரிவித்தது. அந்த அறிக்கையை, அப்படியே அரசு ஏற்றுக்கொண்ட அரசு , பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றர்.
     இந்த வழக்கில் 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பிரபாகரன் என்பவர் அப்ரூவராக மாறினார்.இந்த வழக்கில் 488 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு 3,126 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 60 ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. ஆரம்ப கட்ட விசாரணை கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், பின்னர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு 2006 ஜூலை 12ல் மாற்றப்பட்டது. இங்கு சாட்சிகள் விசாரணை 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 22 மாதங்கள் நடைபெற்று வந்தன. விசாரணை 2014 , ஜூலை 17 ஆம் தேதியுடன் முடிவடைந்தது

No comments:

Post a Comment