Wednesday, 13 July 2016

வெள்ளை ரோஜா

அழகான கிராமம்,சிட்டுக்குருவிகளின் ஓசையுடன்,விடிகிறது காலைப் பொழுது.மாநிறம் 24 வயதுக்குள் இருக்கும் அவளின் பெயர் லெட்சுமி.அம்மா.. எல்லாம் வேலையும் முடிச்சுட்டேன்.பஸ்சுக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன்மா.அவள் சொன்ன வார்த்தைகளுக்கு,அவள் போன பிறகு வருகிறது பதில்,..சரிம்மா. வீட்டிலிருந்து, 1/2கிலோ மீட்டர் தூரம்தான் பஸ்டாப்.அவள் எதிர்பார்த்த பஸ் வந்தது. ஏம்மா லெட்சுமி ,வீட்ல அம்மா,அப்பா சவுக்கியமா?,என்று பாசத்துடன் விசாரித்தார் பஸ் கண்டக்டர். எல்லாரும் நல்லா இருக்காங்கண்னே என்ற பதிலுடன் முன் வாசல்படி வழியாக பஸ்சில் ஏறினாள்.ஒரு மணி நேரம் பயணத்திற்கு பிறகு அவள் வேலை பார்க்கும் கம்பெனி வந்தது.பஸ்சிலிருந்து இறங்கிய அவள் குனிந்த முகத்துடன் கம்பெனி நோக்கி நடந்தாள்.குனிந்த முகத்தை நிமிரச்செய்யும் வகையில்
கேட்டது அவனின் குரல். லெட்சுமி தினமும் உனக்காக இங்கேயே காத்திருக்கிறேன்,என்னிடம் பேசவில்லை என்றாலும் பரவாயில்லை,என் முகத்தையாவது லேசாக பார்க்கக்கூடாதா?....லெட்சுமி.. லெட்சுமி நில்லு லெட்சுமி. அவன் குரலை காதில் வாங்காமல் நடந்து சென்றாள்.ஆம் அவன், அவள் வயது மதிக்கத்தக்க இளைஞன் ஆவான்.ஆறு மாதங்களாய் இவளையே பின்தொடர்ந்து வருகிறான்.
அன்று மாலை 5 மணி இருக்கும்.
கம்பெனி வேலை முடிந்து லெட்சுமி வீட்டிற்கு செல்ல பஸ்டாண்டிற்கு வந்து கொண்டிருந்தாள்.ஆனால் அவனோ அதே இடத்தில் இவளுக்காக காத்துகொண்டிருந்தான். ஊரே என்னை வெறுக்கும் போது,இவன் மட்டும் ஏன் என் பின்னாடியே சுத்துகிறான் என்று முனங்கியபடி பஸ்சில் ஏறினாள்.இன்று என்ன நடந்தாலும் அவளை பார்த்து பேசிட வேண்டியதுதான் என்று,அவனும் பஸ்சில் ஏறினான்.ஊர் எல்லை வந்தவுடன் இறங்க தயாராக படியின் அருகில் வந்த அவள், கடைசி படியில் அவன் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.பஸ்சை விட்டு இருவரும் இறங்கி ஒருவர் பின் ஒருவராக நடந்து வரும்போது,எதிரே வந்த சிலர் இவளை பார்த்து,நல்ல காரியத்திற்கு போகும்போது இவள் எதிரே வராளே என்று முனங்கியது, இவன் காதில் விழுந்தவுடன் இதயம் துடிப்பது சற்று நின்றது.அவளை நோக்கி சென்றவன்,திரும்பி அவர்களை நோக்கிச்சென்றான்.அவளை பற்றிய விசாரனை அவன் ஆழ் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.பின்பு அவர்களிடம் அவளை பற்றி கேட்டுகொண்டிருக்கும் போது,அவன் விழிகளில் கண்ணீர் ததும்பியது.ஆம் கனவனை இழந்து இரண்டு வருடமாய் அம்மா வீட்டிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.இன்று ஊரே அபச்சகுனமாய் இவளை பார்க்கிறது.
()அதே நேரம் அவள் கதையை தன் தந்தையிடம் கூறி அவளை மணக்க ஆசைப்பட்டான் அவன்.தந்தையை தேடி தோட்டத்திற்கு வந்த அவன் தன் தந்தை முகத்தில் மகிழ்ச்சி நிலவியிருப்பதை கண்டான்.வெட்டி விட்ட வாழக்கன்றுகள் எப்படி துளிர் வருதுன்னு பாருப்பா என்று அவர் கூறியது, அவன் மனதில் திருப்தியை ஏற்ப்படுத்தியது.
பின்பு அவன் அப்பாவிடம் பேசி சமாளித்து,அவளுக்கு மறுவாழ்வு கொடுக்க அவள் வீட்டிற்கு புறப்பட்டான்.
(வெட்டிய வாழக்கன்று துளிர் விடுவதை
பார்த்து சந்தோசப்படும் நாம்!,
அணைத்து உணர்ச்சிகளையும் அடக்கி,
வெட்டிய மஞ்சள் கயிற்றுக்காக,
விதவை வேடத்தில்
வாழும் மனித உயிரை நாம்
ஏன் வாழ வைக்க கூடாது!!!?
சகுனத்தடையாய் அவளை உன் மனம் நினைக்கும் வேளையில்,
நீ போகும் காரியம் வெற்றியாக வேண்டும் என்று நினைப்பவள்தான்
அந்த வெள்ளை ரோஜா!!!!..

No comments:

Post a Comment