ஒரு முன்னணி கட்சியில் இருவருமே இருந்தார்கள். போஸ்டர் ஒட்டுவதில் இருந்து, மேடை அமைப்பது வரை எல்லா வேலைகளையும் சேர்ந்தே செய்வார்கள். எல்லாருமே ஆச்சர்யப்பட்டனர்
ஒருவன் வேலு, மற்றொருவன் தாமு. எங்கு பார்த்தாலும் ஒன்றாகவே இருப்பார்கள். இணை பிரியமாட்டார்கள்.
அப்படிப்பட்ட இருவர்களில் ஒருவர்… இப்பொழுது.?
தாமு, எம்.எல்.ஏ-வாகி அமைச்சராகவும் ஆகி விட்டார். யாருமே எதிர்பார்க்கவில்லை. அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, பத்திரிகையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் இருந்த ஒரு நிருபர் “ஸார், உங்க பிரண்ட் வேலுதானே “உங்களுக்கு பி.ஏ-ன்னு கேட்டார்….
அவர்; இல்லேப்பா, வேறொருத்தரை ஏற்பாடு பண்ணியாச்சுப்பா என்றார் அமைச்சர் தாமூ. எல்லாருக்கும் அதிர்ச்சி.
பத்திரிகையாளர்; கூட்டம் முடிந்து, எல்லோரும் கலைந்து போனவுடன், அந்த நிருபர்; மட்டும் ஒதுங்கி இருந்து “ஸார், ஒங்க பிரண்டு வேலுவை வெட்டிவிட காரணம் தெரிஞ்சுக்கலாமா?” ன்னு கேட்டார்..
“அவன் எப்பொழுதும் நண்பனாக இருக்கவே அசைப்படுகிறேன்” என்றார்; அமைச்சர் தாமு, அந்த பதில் வேலுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. நண்பன் தம்மை மறக்கவில்லை என்று உச்சிகுளிர்ந்து நண்பேன்டா என கட்டியணைத்தான் வேலு, அமைச்சர் தாமுவை!
ஆனால், பதில் சரியில்லையே என்று மனதிற்குள் முனகியவாறே, ஒரு நமுட்டு சிரிப்போடு, பத்திரிகை அலுவலகத்திற்கு புறப்பட்டார் நிருபர். அமைச்சரின் அளவளாவிய அன்பைப் பற்றி எழுத….!?.நண்பேன்டாநண்பேன்டாநண்பேன்டா
இனிய கவிதை உலா
Thursday, 14 July 2016
நண்பேன்டா
Labels:
கதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
என்னுடைய கதையை தங்கள் தளத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. இறுதியில் கதை ஆசிரியரின் பெயரை குறிப்பிட்டு பதிவிட்டால் நன்றாக இருக்கும்
ReplyDeleteமன்னித்து கொள்ளுங்கள்
DeleteThis comment has been removed by the author.
Deleteநீங்களும் ஒரு படைப்பாளர், ஆதலால் பிறருடைய பதிவினை பகிரும்போது படித்ததில் பிடித்தது என்று பகிர்தல் நலமாக இருக்கும். பத்திரிகைகளில் அப்படித்தான் செய்வார்கள். மிகப்பெரிய கவிஞரான கவிப்புயல் இனியவன் அவர்கள் என்னுடைய சிறுகதை ஒன்றினை பதிவிட்டு படித்ததில் பிடித்தது என்று குறிப்பிட்டு அதனை தகவலாகவும் தெரிவித்தார். வயது, அனுபவம் என்ற முறையில் கருத்துரை வழங்கி உள்ளேன். ஏற்பதும், மறுப்பதும் உமது விருப்பத்தைச் சார்ந்தது
ReplyDeleteநீங்களும் ஒரு படைப்பாளர், ஆதலால் பிறருடைய பதிவினை பகிரும்போது படித்ததில் பிடித்தது என்று பகிர்தல் நலமாக இருக்கும். பத்திரிகைகளில் அப்படித்தான் செய்வார்கள். மிகப்பெரிய கவிஞரான கவிப்புயல் இனியவன் அவர்கள் என்னுடைய சிறுகதை ஒன்றினை பதிவிட்டு படித்ததில் பிடித்தது என்று குறிப்பிட்டு அதனை தகவலாகவும் தெரிவித்தார். வயது, அனுபவம் என்ற முறையில் கருத்துரை வழங்கி உள்ளேன். ஏற்பதும், மறுப்பதும் உமது விருப்பத்தைச் சார்ந்தது
ReplyDelete
ReplyDeleteநிச்சையம் மற்றிவிட்டேன் இதன் பின் தவறு செய்யமாட்டேன்
ReplyDeleteநிச்சையம் மற்றிவிட்டேன் இதன் பின் தவறு செய்யமாட்டேன்
மறப்போம் நண்பராகி விடுவோம் கருத்துகளை பகிர்ந்து கொள்வோம். வலைத்தளம் வாருங்கள். நானும் எழுத்தாளர்களின் கதைகளை பல ஆண்டுகளாக படித்து அதன் பின் அதன் தாக்கத்தினால் எழுதி வருகிறேன். வாழ்க வளர்க
ReplyDelete