ஒரு நாள் இரவு நண்பர்கள் கூட்டமாகச் சேர்ந்து ஒரு ஹோட்டலில் பெரிய விருந்து ஏற்பாடு செய்தனர். அவர்கள் விடியும்வரை நன்றாகக் குடித்து, உண்டு மகிழ்ந்தனர். அவர்கள் விருந்து முடிந்து போகும்போது அந்த ஹோட்டலின் முதலாளி தனது மனைவியுடன் இப்படி நிறைய எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை அனுப்பியதற்காக கடவுளுக்கு நன்றி கூறும்படி கூறினார். இப்படிப்பட்ட கூட்டம் தொடர்ந்து வந்தால் தாங்கள் பணக்காரர்களாகிவிடலாம் என்றும் அவர் மனைவியிடம் கூறினார். அந்த விருந்தை ஏற்பாடு செய்தவர் ஹோட்டல் முதலாளியிடம் விருந்துக்கான தொகையைக் கொடுக்கும்போது தான் செய்கின்றத் தொழிலும் சிறப்பாக நடைபெற வேண்டுமென்று வேண்டிக் கொள்ளும்படிக் அந்த ஹோட்டல் முதலாளியிடம் கேட்டுக் கொண்டார். ஏனெனில் தான் செய்யும் தொழில் நன்றாக நடந்தால்தான் மீண்டும் மீண்டும் இந்த ஹோட்டலுக்கு என்று கூறினார்.
உடனே ஹோட்டலின் சொந்தக்காரர், “ அது சரி, உங்களது தொழில் என்ன ஐயா? ” என்று கேட்டார். அதற்கு அந்த விருந்து கொடுத்தவர், “ நான் பார்ப்பது சுடுகாட்டில் வெட்டியான் வேலை, நிறைய பேர் செத்தால் தான் எனக்கு தொழில் நன்றாக நடக்கும் ” என்று கூறினான்.
Tuesday, 19 July 2016
ஓஷோ சொன்ன கதை
Labels:
கதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment