Thursday, 14 July 2016

புத்தி வந்தது

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
   - மிக்ஸி வந்தது;

ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
   - கிரைண்டர் வந்தது;

உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
   - குக்கர் வந்தது;

விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
   - கேஸ் அடுப்பு வந்தது;

வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
   - மசாலா பொடி வந்தது;

பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
   - பிரிட்ஜ் வந்தது;

மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
   - வீடியோ கேம் வந்தது;

பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
   - டி.வி. வந்தது;

     இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

     இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

               முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா?

2 comments:

  1. இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்; இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்.. முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

    ReplyDelete
  2. இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்; இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்.. முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

    ReplyDelete