Thursday, 21 July 2016

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்


1923 இல், இந்திய அரசாங்கம் இந்தியசிவில் சேவை சம்பளம் அமைப்பு ஆய்வுசெய்ய ஒரு அரசாங்க சேவைஆணைக்குழு நிறுவப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். 1929ல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பெற்றது. அப்பொழுது இதன் பெயர் The Madras Service Commission. மாநில மறு சீரமைப்புக்குப் பின் 1957- ல் இது மதராசு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் தானாகவே ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்” என்று மாறிவிட்டது.

போட்டித் தேர்வுகள் பலவிதம்:

டி.என்.பி.எஸ்.சி.யைப் பொறுத்தவரையில் பல்வேறு விதமான பொதுத் தேர்வுகளையும், தொழில்நுட்ப பணி தேர்வுகளையும் நடத்தி வருகிறது.

குரூப்-1 தேர்வு     : துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகள்,

குருப்-1-ஏ தேர்வு   : உதவி வனப் பாதுகாவலர் பணி,

குரூப்-1-பி தேர்வு  : இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் பதவி,

குரூப்-2 தேர்வு    : நகராட்சி ஆணையர், உதவி பிரிவு அதிகாரி போன்ற பணி,

குரூப்-4 தேர்வு    : இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணி,

குரூப்-6 தேர்வு    : வனப் பயிற்சியாளர் பதவி,

குரூப்-7 தேர்வு    :  நிர்வாக அதிகாரி கிரேடு-3 பணி,

குரூப்-8 தேர்வு    :  நிர்வாக அதிகாரி கிரேடு-3 பணி இதே பதவியில் கிரேடு- 4 பணி, மற்றும் வி.ஏ.ஓ. என பலவிதமான தேர்வுகளை நடத்துகிறது.

இவை தவிர, உதவி தொழிலாளர் ஆணையர், புள்ளியியல் உதவி இயக்குநர், உதவி புள்ளியியல் ஆய்வாளர், இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர், கைத்தறி உதவி இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்ப பணி தேர்வுகளையும் நடத்தி வருகிறது.

No comments:

Post a Comment