ஒரு சாளரம் வழியே புல்லாங்குழல் இசை கேட்பது போல என்னை தீண்டி என் உணர்வுகளை தூண்டும் உன் குரல்.... சட்டென்று இடைமறித்தலில் சர சர வென கோபத்தில் கணீர் என ஒலித்து எந்தன் காதை பதம் பார்க்கும் உன் குரல்... ஓடையின் சலசலப்பாய் சில துளி சிரிப்புகளோடு தொடரும் எந்தன் சிந்தையை கவர்ந்தபடி சில நாட்களில் உன் குரல்..... கொஞ்சம் குழைவாய் லயமாய் கேட்கும் நீ சிணுங்கி என்னை சிறை செய்யும் நாட்களில் இன்பச்சிறையாய் உன் குரல்... அதட்டி எந்தன் அன்பை அழவைத்து பார்த்துவிட்டு அழுகை துடைப்பதென அவசரமாய் அரவணைக்கும் உன் குரல்... நொடிகளை யுகமாக்கி மணித்துளிகளை நகர்த்தி மனம் முழுதும் உன்னை இருத்தி காத்திருக்கிறேன் உன் குரல் கேட்டிடவே..
No comments:
Post a Comment